ஹிமாச்சல் டூர் போக பிளான் போட்டவர்களுக்கு IRCTC கொடுக்கும் வாய்ப்பு

IRCTC Offers 9 Day Tour to Shimla, Kufri, Manali, Solang Valley : இமாச்சல் ஃபேண்டஸி டூர் பேக்கேஜ்… அறிய விஷயத்தை காண எப்படி செல்வது?

IRCTC Himachal Tour Package
IRCTC Himachal Tour Package

குளிர்காலம் வந்தாச்சு… இந்தியாவின் பல்வேறு இடங்கள் கடும் குளிர் மற்றும் பனி பொழிவை எதிர்கொண்டு வருகிறது. இந்த குளிரை என்சாய் செய்ய வேண்டும் என நினைத்தால் உங்களுக்கானது தான் இந்த IRCTC இமாச்சல் ஃபேண்டஸி டூர் பேக்கேஜ் (Himachal Fantasy tour package).

பிரபல சுற்றுலா தளமான மணாலியில் கடந்த வாரம் மட்டுமே 9 செ.மீ அளவு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதை தவிர, சிம்லா, குஃப்ரி, லஹௌல் ஆகிய இடங்களிலும் பனிபொழிந்து அப்பகுதியே வென்மையாக காட்சியளிக்கிறது.

பொதுவாகவே இந்த இடங்களுக்குச் சென்று பார்க்க வேண்டும் என விருப்பப்படும் பலரும் குளிர் காலத்திலேயே அதிகம் செல்ல விரும்புவார்கள். காரணம், பனிப்பொழிவு காண வேண்டும் என்ற ஆசை. இந்த ஆண்டு எல்லா ஆண்டை விடவும் வழக்கத்துக்கு மாறாக அதிக பனிப்பொழிவு உள்ளது. இந்த நிலை 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் என்றும் சில வானிலை நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

IRCTC Himachal Tour Package 2019 : ஐ.ஆர்.சி.டி.சி ஹிமாச்சல் டூர் பேக்கேஜ்

இத்தகைய அறிய விஷயத்தை காண எப்படி செல்வது என குழம்பி நிற்கும் மக்களுக்காகவே ஐ.ஆர்.சி.டி.சி ஒரு டூர் பேக்கேஜ் வழங்குகிறது. 9 நாட்கள் சுற்றுப்பயணம் அடங்கிய இந்த பேக்கேஜ்ஜில், சிம்லா, கஃப்ரி, மணாலி, சோலாங் வேலி, குளு மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களை சுற்றிப்பார்க்கலாம்.

மதுரை – சென்னை விரைவு ரயில்… தேஜஸ் எக்ஸ்பிரஸ் குறித்து நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது

இந்த பயணம் மேற்கொள்பவர்கள், ஸ்கேண்டல் பாயிண்ட், கெய்ட்டி தியேட்டர், பந்தோ அணை, ஹனோகி மாதா கோவில், ஸ்கீ ஸ்லோப்ஸ், கோதி கோர்ஜ், குலாபா, மார்ஹி, குள்ளு வைஷ்ணோ தேவி கோவில், ரோஸ் கார்டன், ராக் கார்டன் மற்றும் பல இடங்களை சுற்றிப்பார்க்கலாம்.

திருப்பதி, ராமேஸ்வரம், பத்மாவதி கோவிலுக்கு செல்ல வேண்டுமா? IRCTC புதிய திட்டம்

3A/SL கிளாஸ் ரயில் டிக்கெட், ஏசி அறையில் தங்கும் வசதி, ஏசி பஸ் மற்றும் இதர சேவைகளுக்காக கட்டணம் இந்த பேக்கேஜில் அடங்கும். இதற்கான கட்டண செலவை ஐ.ஆர்.சி.டி.சி இணையத்திலேயே செலுத்தலாம்.

ஒரு நபருக்கான விலை : 

IRCTC

தங்கும் வசதி : 

IRCTC

நிபந்தனைகள் :

  1. தாமதம் ஆகும் ரயில்களால் ஒன்றோ அல்லது ஒரு சில சேவைகளோ தவரினால் அதற்கு ஐஆர்சிடிசி பொறுப்பு ஏற்காது.
  2. ரயில் அல்லது சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பஸ்ஸை தவரவிட்டால் பயணியே முழு செலவை ஏற்று அந்த இடத்திற்கு வந்து சேர வேண்டும்.
  3. அவரவர்களின் பொருட்களை அவரவர்களே பாதுகாக்க வேண்டும். ஏதேனும் திருட்டு அல்லது காணாமல் போனால் ஐ.ஆர்.சி.டி.சி பொறுப்பேற்காது.
  4. ஒருவேளை கோவில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் தரிசனம் கேன்சல் செய்யப்பட்டால் தவரவிட்ட சேவைக்கு மட்டுமே பணம் திருப்பி அளிக்கப்படும்.
  5. உங்களின் கவனக் குறைவால் எதையாவது நீங்கள் தவரவிட்டால் அதற்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படாது.

ரயில் பயணத்தில் உங்கள் சீட்டு எங்கு இருக்கிறதோ என்ற யோசனை இனி வேண்டாம்… இதோ வரப்போகுது புது சிஸ்டம்

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Irctc himachal tour package

Next Story
2019 நாடாளுமன்றத் தேர்தல் : அமித் ஷா பிரித்துக் கொடுத்த வேலை… ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லிக்கு என்ன பொறுப்பு?rajnath sing and arun jaitley, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express