இந்திய ரயில்வேயின் புதிய வசதி - ரயில் முன்பதிவு சார்ட்டை இணையத்தில் பார்க்கலாம்
irctc indian railways advance booking chart - முன்பதிவு சார்ட் தயாரித்த பிறகு ரயிலில் காலியாக உள்ள ஏதாவது பெர்த் குறித்த விவரங்களை பயணிகள் தெரிந்துக்கொள்ள இந்த வசதி உபயோகமாக இருக்கும்
IRCTC: நீங்கள் அடிக்கடி ரயில் பயணம் செய்பவரா? அப்படி பயணம் செய்யும் போது எப்போதாவது உங்களுடைய இருக்கை முன்பதிவு உறுதி செய்யப்படாமல் போனதால் நீங்கள் வருத்தப்பட்டுள்ளீர்களா? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்கு தான்.
Advertisment
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
இந்திய ரயில்வே முன்பதிவு சார்ட்டை இப்போது ஆன்லைனில் வெளியிட துவங்கியுள்ளது. காலியான, முன்பதிவு செய்யப்பட்ட அல்லது பாதியளவு முன்பதிவு செய்யப்பட்ட ரயில் இருக்கை அல்லது படுக்கை தொடர்பான விவரங்களை இப்போது பயணிகள், முன்பதிவு சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு தெரிந்துகொள்ளலாம்.
இந்த சிறப்பம்சம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களும் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
முன்பதிவு சார்ட் தயாரித்த பிறகு ரயிலில் காலியாக உள்ள ஏதாவது பெர்த் குறித்த விவரங்களை பயணிகள் தெரிந்துக்கொள்ள இந்த வசதி உபயோகமாக இருக்கும். முதல் முன்பதிவு சார்ட் ரயில் புறப்பட 4 மணிநேரம் முன்னதாக இணையத்தில் வெளியிடப்படும். அடுத்த முன்பதிவு சார்ட்டை ரயில் புறப்படுவதற்கு அரை மணிநேரம் முன்னதாக இணையத்தில் பார்க்க முடியும். இருக்கை ஒதிக்கீடு பற்றிய விவரங்கள் இரண்டாவது முன்பதிவு சார்ட்டில் காண்பிக்கப்படும்.
இந்த புதிய அம்சம் IRCTC e-Ticket booking platform மூலம் இணையம் மற்றும் கைபேசி வழியாக பார்க்கலாம்.
IRCTC இணைய முகவரியில் ரயில் இருக்கை முன்பதிவு சார்ட்டை எவ்வாறு பார்க்க வேண்டும்
1. IRCTC இணையதளத்தில் நுழையவும். அதில் உள்ள புதிய ஆப்ஷனான view charts/vacancy ஐ சொடுக்கவும். இது உங்களை ஒரு புதிய பக்கத்துக்கு கொண்டுச் செல்லும்.
2. உங்கள் பயண விவரங்களான ரயில் எண், பயண தேதி, புறப்படும் ரயில் நிலையம் ஆகியவற்றை தட்டச்சு செய்து get train chart ஆப்ஷனை சொடுக்கவும்.
3.இப்போது நீங்கள் முன்பதிவு சார்ட்டை பார்க்க முடியும்.
4. வகுப்பு வாரியாக மற்றும் ரயில் பெட்டி வாரியாக காலியாக உள்ள இருக்கைகள் விவரங்களை பார்க்க முடியும்.