IRCTC : ரயில் பயணத்தை அடிக்கடி மேற்கொள்ளும்போது வரும் முக்கிய பிரச்சனையில் ஒன்று, வெயிட்டிங் லிஸ்ட். எப்போடா டிக்கெட் கன்ஃபார்ம் ஆகும் என்ற டென்ஷனில் இருந்து விடுபெற புதிய செயலி அறிமுகம்
HHTs என்ற புதிய டேப்லட் செயலி ஒன்றை இந்தியன் ரயில்வேத்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி பொருத்தப்பட்ட டேப்லெட்டை டிடிஇ-களிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம், ரயில் எங்கே இருக்கிறது என்ற விவரத்துடன் இணைந்து வெயிட்டிங் லிஸ்ட் குறித்தும் கண்டறியப்படும்.
அலுங்காம குலுங்காம மதுரை போகணுமா? இதோ வந்தாச்சு சொகுசு ரயில்
இது குறித்து ரயில்வேத்துறை அமைச்சகம் கூறியுள்ள விவரத்தில், “முதலில் 550 HHTs செயலி டேப்லெட்டை இந்தியா முழுவதும் உள்ள டிடிஇ-யிடம் கொடுக்க இருக்கிறோம். பின்னர் இதன் பயன்பாடு குறித்த விவரங்களை திரட்டிய பின்னர் இதனை முழுமையாக செயல்படுத்துவது பற்றிய முடிவு எடுக்கப்படும்” என்றனர். இந்த சேவை முதலில் சதாப்தி மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் பரிசோதனை செய்து பார்க்கப்படவுள்ளது.
IRCTC : HHT புதிய செயலி பயன்:
- RAC மற்றும் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு விரைவில் டிக்கெட் பதிவு செய்து தருவதற்கு உதவும்.
- எந்தெந்த இருக்கைகள் காலியாக உள்ளது என்ற விவரங்கள் தெரியப்படுத்தும்.
- ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட பின்னர், TTE-கள் இந்த செயலி மூலம் ஒரே இடத்தில் இருந்துக் கொண்டு எந்த இருக்கைகள் காலியாக உள்ளது என்பதை கண்டறிந்து வெயிட்டிங்கில் உள்ளவர்களுக்கு பதிவு செய்வார்கள்.
- இந்த செயலி, ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்கும், காத்திருப்பு பட்டியல் அல்லது டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு சிறந்த வகையில் கைக்கொடுக்கும்.
- ஒருவேளை பயணிகள் தங்களின் பர்த்துகளை மாற்ற வேண்டுமென்றால், அதாவது கீழ் பர்த் இருப்பவர்கள் மேல் பர்த் வேண்டுமென்றால் அதையும் மாற்றிக் கொடுக்க இந்த செயலி உதவும்.
இந்தியன் ரயில்வே புதிய சலுகை : வெறும் 400 ரூபாய் இருந்தால் போதும்... முழு கோவாவை சுற்றிப் பார்க்கலாம்
பேப்பர் திட்டத்தில் இருந்து எலெக்டிரானிக் மையமாக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம், TTE-களுக்கு வேலை எளிமையாவதுடன், பயணிகள் வெகு நேரம் காத்திருக்காமல் விரைவில் பயனடைய உதவுகிறது.