IRCTC Offers South India Divine 6N 7 D Tour Package : ஐஆர்சிடிசி சுற்றுலா தளம், திருப்பதி, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மற்றும் மதுரை செல்ல 7 நாள் பேக்கேஜ் அறிமுகம் செய்துள்ளது.
தென் இந்தியா ஆன்மீகம் சுற்றுலா பேக்கேஜ் என அழைக்கப்படும் இந்த புதிய பேக்கேஜ்ஜில், பத்மநாபசாமி கோவில், விவேகநந்தா பாறை, ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்க்கலாம். இதற்கான டிக்கெட்டை irctctourism.com இணையத்தில் புக்கிங் செய்துக் கொள்ளலாம்.
IRCTC : இந்தியன் ரயில்வே ஆன்மீக சுற்றுலா
மார்ச் 1ம் தேதி தொடங்க இருக்கும் இந்த சுற்றுலாவை தேர்ந்தெடுப்பவர்கள் இண்டிகோ விமானத்தில் பயணிப்பார்கள். இந்த 7 நாட்கள் பயணத்தில் கட்டணம், 36,650 ரூபாய் ஆகும்.
The charm of South India can be best defined through IRCTC which offers "South India Divine Tour" Air Package Ex Delhi in just Rs. 37,540 PP covering Trivandrum, Kanyakumari, Rameshwaram, Madurai & Tirupati in 7 Days. For details, visit https://t.co/GcqBQEc6G4 pic.twitter.com/xTxUoVR9Cz
— IRCTC (@IRCTCofficial) 30 December 2018
இந்த பேக்கேஜ் வசதி என்னென்ன?
- பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து, கட்டணங்கள் மாறுபடும். ஒரே ஒரு ஆள் பயணிக்கும் முறையை தேர்ந்தெடுத்தால் 48,280 ரூபாய் கட்டணம் பெறப்படும்.
- டெல்லி - சென்னை வரும் பயணிகள் விமானம் மூலம் பயணிப்பார்கள்.
- இந்த பேக்கேஜ்ஜில், டெல்லி - சென்னை, சென்னை - திருவனந்தபுரம் மற்றும் மதுரை - டெல்லி பயணம் அடங்கும். டெல்லி - சென்னை மற்றும் மதுரை - டெல்லி விமானத்தில் மட்டும் சைவ உணவு வழங்கப்படும்.
- இந்த பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளுக்கும் 6 நாட்களுக்கும் காலை உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படும். சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்க்க பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்படும்.
- இருப்பினும், சுற்றுலா தளங்களின் நுழைவு வாயில் கட்டணம், துணி சலவை, தொலைப்பேசி உபயோகம் உள்ளிட்ட தனிப்பட்ட சேவைகளுக்கான செலவுகளை பயணிகளே ஏற்க வேண்டும்.
ரயில் பயணத்தில் சாப்பாடு அதிக விலைக்கு கிடைக்கிறதா? இதோ ஒரு தீர்வு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.