IRCTC -ல் பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு 10% முதல் 100% வரை வெவ்வேறு வகைக்கு கீழ் சலுகைகளை வழங்குகிறது இந்தியன் ரயில்வே.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள், போரின் காரணமாக கணவனை இழந்த பெண்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பயணச்சீட்டுகளில் பல சலுகைகள் வழங்கப்படுகிறது.
இருப்பினும் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே ஐஆர்சிடிசி-யில் சலுகை வழங்கப்படுகிறது. பிற சலுகைகள் அனைத்தும் பி.ஆர்.எஸ் மூலம் தான் பெற முடியும். அதற்கான பதிவுகளை indianrail.gov.in. என்ற இணையத்தளத்தில் செய்யலாம்.
IRCTC வழங்கும் சிறப்பு சலுகைகள்
இந்த சலுகைகள் பற்றி சுருக்கமான விவரங்கள்
- எல்லா சலுகைகளும் விரைவு ரயில்களுக்கு ஏற்றதுபோல் கணக்கீடு செய்யப்படும். அதாவது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரயிலை பொருத்து உங்களின் பயணச்சீட்டில் சலுகைகள் வழங்கப்படும்.
- எல்லா விதமான சலுகைகளும் ரயில்வே நிலையத்தில் உள்ள கவுண்டரிலேயே வாங்கும்போது மட்டுமே பெற முடியும்.
- ஒரே ஒரு சலுகையை மட்டுமே பயணி பெற முடியும். இரண்டு அல்லது மூன்று சலுகைகள் பெற முடியாது.
- சலுகை பெற்ற பயணியால் டிக்கெட்டை வேறு கிளாஸுக்கு மாற்ற முடியாது.
- மூத்த குடிமக்கள் பயணிக்கும் பயணச்சீட்டுகளுக்கு ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
விடுமுறை வரப்போகுது... அந்தமான் போகலாமா? அதுவும் IRCTC வசதியில்