scorecardresearch

ஜூன் 1 முதல் இயங்கும் 100 ரயில்கள் பட்டியல்: முன்பதிவு இன்று தொடக்கம்

சிறப்பு ரயில்களில் திவ்யாங்ஜன் சலுகையின் நான்கு பிரிவுகளும், 11 வகை நோயாளி சலுகைகளும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

ஜூன் 1 முதல் இயங்கும் 100 ரயில்கள் பட்டியல்: முன்பதிவு இன்று தொடக்கம்

இந்தியாவில் பயணிகள் ரயில் சேவையை தொடங்க தரம் உயர்த்திய இரண்டாம் கட்டத்தில், ஜூன் 1 முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ள 100 ரயில்களின் பட்டியலில், 17 ஜன் சதாப்தி, 5 டொரேன்டோ மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பாரம்பரியமான மெயில் மற்றும் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்கள் இடம்பெற்றுள்ளன.

உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்த நாளிலேயே இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

வங்கிக் கடனாளிகள் இன்னும் கொஞ்சம் மூச்சு விடலாம்: எஸ்பிஐ கூறும் நல்ல செய்தி

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இதை ட்விட்டரில், செவ்வாய்க்கிழமை அறிவித்தார். 200 ரயில்கள் என்று கூறியிருந்தாலும், இது 100 ஜோடி ரயில்களைக் குறிக்கிறது என்று தெரிகிறது. முன்பதிவு வியாழக்கிழமை காலை தொடங்குகிறது. இந்த ரயில்களை 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம். ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

குறிப்பிடத்தக்க வகையில், ரயில் நிலையங்களில் உணவு நிலையங்கள் மற்றும் கேண்டீன்கள் திறக்கப்பட வேண்டும் என்றும் ரயில்வே வாரியம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஆர்வத்தில், புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த மாநிலங்களிலிருந்து வேலை செய்த மாநிலங்களுக்கு திரும்பி வருவதற்கான விருப்பங்களைத் திறக்கும் இரட்டை நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐந்து துரந்தோ ரயில்களில் ஹவுராவிலிருந்து யஸ்வந்த்பூர், சீல்தா முதல் பூரி, ஷாலிமார் முதல் பாட்னா, எர்ணாகுளம் முதல் நிஜாமுதீன் மற்றும் செகந்திராபாத் முதல் நிஜாமுதீன் வரை இயங்கும். இது இந்தியா முழுவதும் நகரங்களையும், பெருநகரங்கள் மற்றும் தலைநகரங்களையும் இணைக்கிறது.


குறுகிய தூரத்திற்கு அமரக்கூடிய ரயில்களாக இருக்கும் 17 ஜனசதாப்தியை தவிர, வழக்கமான மெயில் / எக்ஸ்பிரஸ் நீண்ட தூர ரயில்களில் ஷிவ்காங், ஷ்ராம்ஜீவி, கோவா எக்ஸ்பிரஸ், ஆந்திரா எக்ஸ்பிரஸ், கோல்டன் டெம்பிள் மெயில், கர்நாடக சம்பர்க் கிரந்தி, ஹவுரா-மும்பை மெயில், ஆசிரமம் எக்ஸ்பிரஸ், கரம்பூமி எக்ஸ்பிரஸ் போன்றவை இயக்கப்படுகின்றன.

IRCTC passenger train
ரயில்கள் பட்டியல்
IRCTC passenger train
ரயில்கள் பட்டியல்

”இவை ஏசி மற்றும், ஏசி அல்லாத வகுப்புகளைக் கொண்ட முழு முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களாக இருக்கும். பொது பெட்டியில் உட்காருவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இருக்க வேண்டும். ரயிலில் முன்பதிவு செய்யப்படாத கோச் இருக்காது. கட்டணம் சாதாரணமாக இருக்கும், பொது (ஜிஎஸ்) பெட்டி, முன்பதிவு செய்யப்படுவதால், இரண்டாவது இருக்கை (2 எஸ்) கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் அனைத்து பயணிகளுக்கும் இருக்கை வழங்கப்படும்” என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்ட சிறப்பு ராஜதானி ரயில்களில் செய்ததைப் போல, அறிகுறியற்ற பயணிகளை மட்டுமே பயணிக்க அனுமதிக்கும் வழக்கமான சுகாதார நெறிமுறை தொடரும். 90 நிமிடங்கள் முன்னதாக நிலையத்தை அடைய வேண்டும். சிறப்பு பாஸ் மற்றும் ஒதுக்கீட்டிற்காக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்படும். ஆனால் இது பொது மக்களுக்கு அல்ல.

சரிகிறது டாஸ்மாக் விற்பனை: தமிழர்கள் திருந்துகிறார்களா?

இந்த சிறப்பு ரயில்களில் திவ்யாங்ஜன் சலுகையின் நான்கு பிரிவுகளும், 11 வகை நோயாளி சலுகைகளும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதற்கிடையே மத்திய அரசு அறிவித்திருக்கும் சிறப்பு ரயில்களில் சென்னை / தமிழகத்திற்கு எந்த ரயில்களும் இல்லை. முன்னதாக கொரோனா தொற்று காரணமாக தமிழகத்திற்கு பயணிகள் ரயில் சேவை வேண்டாம் என பிரதமருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Irctc passenger train service restarts railway booking opens corona lockdown