IRCTC Passengers can book more tatkal tickets : இந்திய ரயில் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி. இறுதி நேர ரயில் முன்பதிவு செய்யும் போது ஏற்படும் கவலைகளை மறந்து விடுங்கள், இனி அதிக தட்கல் பயணச்சீட்டுகள் கிடைக்கும். பயணிகள் நல்லெண்ண நடவடிக்கையாக இந்திய ரயில்வே, எல்லா சட்ட விரோத மென்பொருள்களையும் நீக்கி, அந்த சட்ட விரோத மென்பொருள் மூலம் தட்கல் பயணசீட்டு முன்பதிவு முறையை தடுத்து வந்த 60 முகவர்களையும் கைது செய்துள்ளது. இந்திய ரயில்வேயின் இந்த தூய்மையாக்கும் நடவடிக்கையின் மூலம் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் மட்டும் கிடைத்து வந்த தட்கல் ரயில் பயணச்சீட்டுகள் இனி பல மணி நேரம் கிடைக்க வழிவகுக்கும், என ரயில்வே பாதுகாப்பு படை (Railway Protection Force) தலைமை இயக்குநர் அருண் குமார் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க : ஈரோடுக்கு ஒரு டிக்கெட் பார்சல்… சைவ, அசைவ உணவுகளுடன் ரெடியாக காத்திருக்கும் ரயில் நிலையம்!
சட்ட விரோத மென்பொருள்களான ANMS’, ‘MAC’ and ‘Jaguar’ போன்றவை ஐஆர்சிடிசி யின் login captcha, booking captcha மற்றும் வங்கி ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கடவுசொல் (OTP) ஆகியவற்றை புறக்கணித்துவிட்டு பயணச்சீட்டை முன்பதிவு செய்ய செல்லும். ஆனால் ஒரு உண்மையான பயணி தட்கல் முறையில் முன்பதிவு செய்யும் போது இந்த அனைத்து செயல்முறைகளையும் கடந்து செல்ல வேண்டும். ஒரு பொது பயனர் தட்கல் முறையில் பயணசீட்டு முன்பதிவு செய்யும் செயல்முறைக்கு 2.55 நிமிடங்கள் ஆகும். ஆனால் இந்த வகை சட்ட விரோத மென்பொருள்களின் வழியாக முன்பதிவு செய்யும் போது 1.48 நிமிடங்களில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து விடலாம், என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க : பரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்?
இன்று முதல் ஒரு பயணச்சீட்டு கூட சட்ட விரோத மென்பொருள் மூலம் முன்பதிவு செய்யப்படவில்லை. ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பு இருந்துவந்த அனைத்து பிரச்சினைகளும் களையெடுக்கப்பட்டுவிட்டது. மேலும் சட்ட விரோத மென்பொருளை பயன்படுத்தி வந்த முக்கிய முகவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டதாக, ரயில்வே பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் கூறியுள்ளார். தட்கல் முன்பதிவு முறையில் சட்டவிரோத மென்பொருள்களை பயன்படுத்தி ஆண்டுக்கு ரூபாய் 50 முதல் 100 கோடி வரை வணிகம் செய்து வந்தது தடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”