Advertisment

IRCTC Refund Rules 2020: ரிசர்வ், RAC, காத்திருப்பு டிக்கெட் ரத்து கட்டணங்கள் - நீங்கள் அறிய வேண்டிய 10 அப்டேட்ஸ்

irctc ticket booking: தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. மேலும், சார்ட் தயாரிக்கப்பட்டவுடன் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்ய முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC Indian Railways new feature check your train reservation chart online - IRCTC-ன் புதிய அறிவிப்பு - இனி ஆன்லைனிலேயே ரயில் முன்பதிவு சார்ட்டை சரி பார்க்கலாம்

IRCTC Indian Railways new feature check your train reservation chart online - IRCTC-ன் புதிய அறிவிப்பு - இனி ஆன்லைனிலேயே ரயில் முன்பதிவு சார்ட்டை சரி பார்க்கலாம்

IRCTC: நீங்கள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்துள்ளீர்களா? பணத்தைத் திரும்பப் பெறுவது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? ஆம் எனில், உங்கள் கவலைகள் அனைத்தையும் இப்போது முடிவுக்குக் கொண்டு வாருங்கள்! இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கான பயணத்தை எளிதாக்க புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது. பணம் திரும்பப் பெறுவது பற்றிய புதிய விதிகள் குறித்தும், திருத்தப்பட்ட விதிகள் குறித்தும் இங்கே பார்க்கலாம்,

Advertisment

ஐ.ஆர்.சி.டி.சி பணத்தைத் திரும்பப்பெறும் விதிகள் 2020: தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

1. முன்பதிவு செய்யப்படாத, RAC மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளுக்கு, ரத்து செய்தல்  கட்டணங்கள் முன்பதிவு செய்யப்படாத (இரண்டாம் வகுப்புக்கு) ரூ.30 ஆகவும், இரண்டாம் வகுப்பு (ஒதுக்கப்பட்ட) மற்றும் பிற வகுப்புகளுக்கு ரூ.60 ஆகவும் உள்ளன.

ஜே.என்.யு தாக்குதல் : 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை

ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது, ​​முதல் ஏசி / எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கான ரத்து கட்டணம் 240 ரூபாய்; இரண்டாவது ஏசி / முதல் வகுப்பு ரூ .200; மூன்றாவது ஏசி / ஏசிசி / 3 ஏ எகானமி வகுப்புக்கு ரூ 180; இரண்டாவது ஸ்லீப்பர் வகுப்புக்கு ரூ 120, இரண்டாம் வகுப்புக்கு ரூ.60 கட்டணமாகும்

(ii) ரயில் புறப்படுவதற்கு 48 மணி முதல் 12 மணி நேரத்திற்கு முன்பாக உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது, ​​மேலே (i) படி ரத்து கட்டணம் 25% குறைந்தபட்ச கட்டணத்திற்கு உட்பட்டதாக இருக்கும்.

(iii) ரயில் புறப்படுவதற்கு 12 மணி முதல் 4 மணி நேரத்திற்கு முன்பாக உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்தால், மேலே (i) படி ரத்து கட்டணம் 50% கட்டணம் வசூலிக்கப்படும்.

IRCTC ticket Cancellation charges IRCTC ticket Cancellation charges

(iv) ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு partially confirmed ticketகளுக்கும் பணம்  திருப்பித் தரப்படுகிறது

(v) clerkage கட்டணம் விலக்குக்கு உட்பட்டு ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு பயன்படுத்தப்படாத RAC / WL டிக்கெட்டுகளுக்கு கட்டணம் அளிக்கப்படுகிறது.

(vi) மின் டிக்கெட் ரத்து செய்தால், பணம் உங்கள் கணக்கிற்கு திரும்ப வந்துவிடும். இதற்கு டி.டி.ஆர் தாக்கல் தேவையில்லை.

(vii) பிரீமியம் சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட CNF/RAC டிக்கெட்டை ரத்து செய்ய அனுமதி இல்லை. இருப்பினும், ரயில் ரத்து செய்யப்பட்டால் மட்டுமே டிக்கெட்டை ரத்து செய்ய முடியும். அந்த சந்தர்ப்பங்களில், பணத்தைத் திரும்பப்பெறுதல் பிஆர்எஸ் (Passenger Reservation System) அமைப்பால் வழங்கப்படுகிறது.

2. ரத்து செய்யவேண்டிய ரயில் டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலத்திற்குள் திருப்பிக் கொடுத்தால், கட்டணம் பிஆர்எஸ் கவுண்ட்டரில் அளிக்கப்படும். ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் அல்லது 139 மூலம் ஒருவர் டிக்கெட்டை ரத்து செய்திருந்தால், அந்த நபர் முன்பதிவு தொகையை முன்பதிவு கவுண்டரிலிருந்து சேகரிக்க முடியும்.

3. ஆன்லைனில் யாராவது டிக்கெட்டை ரத்து செய்திருந்தால், பணத்தைத் திரும்பப்பெறுதல் 5 நாட்களுக்குள் அவர்களது வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகும். டிக்கெட் ஸ்டேஷன் கவுண்ட்டரில் ரத்து செய்யப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் கவுண்ட்டரில் பணம் திருப்பி அளிக்கப்படும்.

4. பயன்படுத்தப்படாத டிக்கெட்டுகளுக்கு யாராவது பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், சம்பந்தப்பட்ட நபர் சிறப்பு அதிகாரம் கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள நிலைய முதுநிலை / மேலாளர்களுடன் சரிபார்க்கலாம்.

IRCTC refund rules 2020 IRCTC refund rules 2020

5. வெள்ளம், பந்த் போன்ற சூழ்நிலைகளில், குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த நபர் முன்பதிவு கவுண்டரை அடைய முடியாவிட்டால், அவர் / அவள் 3 நாட்களுக்குள் டிக்கெட் வைப்பு ரசீதை (டி.டி.ஆர்) தாக்கல் செய்யலாம். இதைத் தொடர்ந்து, அந்த நபர் கட்டணம் திருப்பிச் செலுத்த சிசிஎம்மில் (Chief Commercial Manager) விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார். இந்த வழக்குகளில், பணத்தைத் 90 நாட்களுக்குள் திருப்பி வழங்கப்படுகிறது.

6. தவறாக இடத்திற்கு புக் செய்யப்ப டிக்கெட்டுகள் / தவறவிடப்பட்ட டிக்கெட்டுகளுக்கு, பணத்தைத் திரும்பப் பெற முடியாது. கிழிந்த / சிதைந்த டிக்கெட்டின் நம்பகத்தன்மை சரிபார்க்கக்கூடியதாக இருந்தால், டிக்கெட்டில் காணக்கூடிய விவரங்களின் அடிப்படையில் நபருக்கு பணத்தைத் திருப்பித் தரப்படும். தவறாக / இழந்த டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்டால் / ஆர்ஏசி கிடைத்தால், பின்னர் அதே இட ஒதுக்கீட்டில் நகல் அனுமதி பயணம் வழங்கப்படும்.

7. தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. மேலும், சார்ட் தயாரிக்கப்பட்டவுடன் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்ய முடியாது, இருப்பினும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஆன்லைன் டி.டி.ஆர் தாக்கல் ஐ.ஆர்.சி.டி.சியின் கண்காணிப்பு சேவையின் மூலம் பணத்தைத் திரும்பப் பெறும் நிலையைக் கண்டறிய பயன்படுத்தலாம்.

8. ஆன்லைன் மூலமாக ஒரு பெரும் குடும்பத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்கிற போது, சிலருக்கு இடம் உறுதி செய்யப்பட்டு, மற்றவர்கள் ஆர்.ஏ.சி அல்லது காத்திருப்பு பட்டியலில் இருந்தால், இடம் உறுதிப்படுத்தப்பட்ட நபர்களுக்கு கட்டணம் முழுவதுமாக திரும்பி அளிக்கப்படும். குறைவான clerkage கட்டணமே பிடிக்கப்படும்.

IRCTC Booking: முதல்ல டிரெய்ன் டிக்கெட் பண்ணுங்க, அப்புறம் காசு கொடுக்கலாம் - ஐஆர்சிடிசி-யின் புதிய சேவை

9. கடந்த ஆண்டு, ஐ.ஆர்.சி.டி.சியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களால் முன்பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கான புதிய ஓடிபி அடிப்படையிலான பணத்தைத் திரும்பப்பெறும் முறையை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியது. இதன் கீழ், யாராவது டிக்கெட்டை ரத்து செய்ய அல்லது முழு காத்திருப்பு-பட்டியலிடப்பட்ட டிக்கெட்டை கைவிட திட்டமிட்டால், குறிப்பிடப்பட்ட பணத்தைத் திருப்பிச் செலுத்தும் தொகையுடன் OTP எஸ்எம்எஸ் அவருக்கு அனுப்பப்படும். பணத்தைத் திருப்பிச் செலுத்தும் தொகையைப் பெற, டிக்கெட்டை முன்பதிவு செய்த முகவருடன் OTP ஐப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

IRCTC Ticket Booking IRCTC Ticket Booking

10. கடந்த ஆண்டு, மற்றொரு விதி அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகள் இரண்டாவது ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது பி.என்.ஆர்களை இணைக்க விருப்பம் இருந்தால் இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் கீழ், முதல் ரயிலின் தாமதத்தால், ஒரு நபர் இணைக்கும் ரயிலை தவறவிட்டால், பயணித்த பகுதிக்கான கட்டணம் தக்கவைக்கப்பட்டு, மீதமுள்ள தொகை அந்த நபருக்கு வழங்கப்படுகிறது. திருப்பிச் செலுத்தும் அந்த கட்டணம் என்பது அவர் பயணம் செய்யத கட்டணத்தில் இருந்து கொடுக்கப்படும்.

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment