IRCTC Refund Rules for Cancellation of Confirmed and Waiting Tickets: ஊருக்கு செல்ல டிக்கெட் எல்லாம் புக் செய்து பிறகு அந்த பயணம் ரத்து செய்த பயணிகளுக்காக தான் இந்த செய்தித் தொகுப்பு. உறுதி செய்யப்பட்ட அல்லது காத்திருப்பு பட்டியலில் இருப்போர் ரயில் டிக்கெட் கேன்சல் செய்தால் எவ்வளவு பணம் திரும்ப அளிக்கப்படும் என்பதன் விவரங்களை ஐ.ஆர்.சி.டி.சி வழங்கியிருக்கிறது.
இந்தியன் ரயில்வேத்துறை பராமரித்து வரும் ரயில் பயணச்சீட்டு பதிவு இணையத்தளமான ஐஆர்சிடிசி-யில் இந்தியா முழுவதும் பயணிக்க அனைத்து ரயில்கள் விவரங்களும், கட்டண விவரங்களும் அடங்கியிருக்கும். மேலும் கோடை விடுமுறை மற்றும் பிற சுற்றுலா சீசன்களில் வித விதமான சுற்றுலா பயணம் திட்டங்களையும் மக்களுக்காக அறிமுகப்படுத்தி வருகிறது.
IRCTC ஆன்லைன் கட்டணம்... இந்த 5 வழியில் எதில் வேண்டுமானாலும் புக் செய்யலாம்
அது மட்டுமின்றி, இந்தியாவின் எந்த இடத்தில் இருந்தாலும் சொந்த ஊருக்கு செல்ல, கம்யூட்டர் மற்றும் செல்போன் மூலம் டிக்கெட் புக் செய்துக் கொள்ளலாம். அதே நேரம், நீங்கள் பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துக் கொள்ளும் வசதியும் ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் உள்ளது.
IRCTC Refund Rules : ஐ.ஆர்.சி.டி.சி ரத்து செய்யும் கட்டணம்
உறுதி செய்யப்பட்ட அல்லது காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணச் சீட்டுகளை ரத்து செய்தால், குறிப்பிட்ட ஒரு கட்டணத்தை நீங்கள் ரத்து கட்டணமாக செலுத்த வேண்டும். அவற்றின் விவரங்கள் கீழ் வருபவை:
உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு பெறப்படும் ரத்து கட்டணம்:
1. 48 மணி நேரத்திற்கு முன்பு பயணச் சீட்டை ரத்து செய்தால் இந்த கட்டண வசூலிக்கப்படும்:
2. ரயில் பயணம் தொடங்குவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தால் ஜிஎஸ்டி உட்பட 25% ரத்து கட்டணமும் வசூலிக்கப்படும்.
3. 12 மணி நேரத்திற்கு அல்லது பயணத்தின் 4 மணி நேரத்திற்கு முன்னதாகவோ, அல்லது பயணிகளின் பட்டியல் தயாரிப்பிற்கு பிறகு டிக்கெட் கேன்சல் செய்தால் 50% ரத்து கட்டணம் வசூலிக்கப்படும்.