irctc ticket booking : ஐஆர்சிடிசி வலைத்தளத்தின் மூலம் முன்பதிவு செய்யும் இ-டிக்கெட்டுககளுக்கான சேவை வரியை மூன்றாண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்த போகிறது ஐஆர்சிடிசி. டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக நிருத்தப்பட்டிரிந்த சேவை வரி மீண்டும் நடை முறைப்படுத்துவதால் இனி ஐ.ஆர்.சி.டி.சி இ-டிக்கெட்டின் விலையும் அதிகரிக்கும்.
இதை பற்றி ஐஆர்சிடிசி-யின் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் "நிதி அமைச்சகம் ஒரு தற்காலிகமாகத் தான் சேவை வரியை ரத்து செய்தது. இந்த ரத்தால், 2016-17 நிதியாண்டில் மட்டும் ஐஆர்சிடிசி-யின் 26% வருவாய் சரிந்தது. மேலும், டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் தற்போது நன்கு நடைமுறையில் இருப்பத்தால் சேவை வரியை மீண்டும் அமல்படுத்த நிதி அமைச்சகம் எங்கள் ரயில்வே துறைக்கு ஆலோசனை தந்துள்ளது. இந்த ஆலோசனையை எங்களது ரயில்வே அதிகாரிகளும் ஆராய்ந்து முடிவெடுப்பார்கள்" என்றார்.
உஷார் பயணிகளே! ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் புக் செய்யும் போது நீங்கள் ஏமாற்றப்படலாம்.
மூன்றுவருடங்களுக்கு முன்பு, ஐஆர்சிடிசி ஏ.சியில்லாத கோச்சுகளின் இ-டிக்கெட்களுக்கு ரூ.20 என்ற ரீதியிலும், ஏ.சி கோச்சுகளுக்கு இ.டிச்கேடுகளுக்கு ரூ.40 என்ற ரீதியிலும், சேவை வரியாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.