Advertisment

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல பிளான் போட்டாச்சா? IRCTC -ல் இருக்கும் டிக்கெட் சலுகைகள் இதோ

ஐஆர்சிடிசியில் டிக்கெட் புக்கிங்கில் இருக்கும் சலுகைகளை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
irctc ticket booking offer

irctc ticket booking offer

irctc ticket booking offer : தீபாவளி நெருங்கி விட்டது. எல்லாரும் சொந்த ஊர் செல்ல நிறைய பிளான்களை போட்டு இருப்பீங்க. கடைசி நேரத்தில் பஸ், ரயில் டிக்கெட் புக் பண்ணா நிறைய சிரமங்களை பார்ப்பீர்கள்.

Advertisment

இதிலிருந்து ஈஸியாக தப்பிக்க முன்னரே டிக்கெட் புக்கிங் வேலைகளை செய்து விடுங்கள். IRCTC இணையதளம் மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்ய திட்டமிட்டு இருங்கீங்களா? இந்த செய்தித் தொகுப்பு உங்களுக்கு தான். ஐஆர்சிடிசியில் டிக்கெட் புக்கிங்கில் இருக்கும் சலுகைகளை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

irctc ticket booking offer:

1. IRCTC iPay என்ற பேமெண்ட் கேட்வே சேவை அறிமுகம் செய்துள்ளது.

2. IRCTC iPay பேமெண்ட் கேட்வே சேவை மூலம் டிக்கெட்டுக்கான கட்டணத்தைச் செலுத்தும் போது எக்காரணத்தைக் கொண்டும் பரிவர்த்தனை ரத்தாகாது.

3. ஐஆர்சிடிசி தனது பயணிகளுக்கு வாடகை கார் வசதியையும் தருகிறது. முன்னதாக வாடகை கார் நிறுவனமான ஒலாவோடு ஐஆர்சிடிசி நிறுவனம் தனது பயணிகளுக்கு வாடகை கார் வசதியைத் தரும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளது.

4. டிக்கெட் விலை சலுகை என்பது அண், பெண் என இருபாலர் மூத்த குடிமக்களுக்கு உண்டு. 60 வயதை கடந்த ஆண்களும், 58 வயதை கடந்த பெண்களும் சலுகை பெற தகுதியானவர்கள்.

5. மெயில், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சதப்தி, ஜன் சதப்தி, துரந்தோ என அனைத்து ரயில்களுக்கும் இந்த விலை சலுகை பொருந்தும்.

6. குடிமக்கள் சலுகையில் பயணிக்கும் பயணிகள் தங்கள் வயதிற்கான் அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.

7. மூத்த குடிமக்களுக்கு முழு விலை சலுகை, பகுதி விலை, அல்லது உண்மையான விலை என்ற 3 தேர்வுகள் இருக்கும். டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு தேவையான தேர்வை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

8. பிற பேமெண்ட் கேட்வே சேவையில் உள்ளது போன்றே ஐஆர்சிடிசியின் இந்தப் புதிய பேமெண்ட் கேட்வேயிலும் ஆன்லைன், கிரெடிட்/டெபிட் கார்டு, யூபிஐ போன்ற வழிகளில் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.

பயணிகளின் டிக்கெட் விலை உயர்கிறதா?

9. ரயில் பயணங்களில் இருக்கும் பொழுதே தங்களுக்கு விருப்பமான உணவகங்களில் இருந்து விருப்பமான உணவைப் பெறும் வகையிலான சேவையை புட் ஆன் டிராக்(Food on Track) என்ற திறன்பேசி செயலியின் மூலம் பயணிகள் பெறலாம் என்றும் ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. பிஎன்ஆர் எண்ணை(PNR Number) வைத்து பயணிகள் உணவு தருவிக்கலாம். ஆன்லைன், ஆப்லைன், க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட், கேஷ் ஆன் டெலிவிரி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்தலாம்.

10. சார்ட் தயாரவதற்கு முன் டிக்கெட்டை கேன்சல் செய்ய விரும்பினால் irctc.co.in என்ற இணைய தளத்திற்கு சென்று ‘’My Transactions’ என்ற டேப்பை திறந்து கேன்சல் செய்யலாம்.

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment