irctc ticket cancel :வெளியூர் செல்ல கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தவர்கள் கடைசியில் பயணத்தை கேன்சல் நிலைமை ஏற்படலாம். அப்படி ஏற்படும் போது அவர்கள் முதலில் நினைத்து வருந்துவது புக் செய்யப்பட்ட டிக்கெட் குறித்து தான். காரணம், ஒருகுறிப்பிட்ட தொகையை செலுத்தி டிக்கெட் புக் செய்து விட்டு அதை கேன்சல் செய்தால் பாதி தொகை கூட திரும்ப கிடைக்காது. நஷ்டம் தான். இந்த கவலைய இனிமே விடுங்க.
ஆன்லைனில் புக் செய்த டிக்கெட் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் அப்படியே கேன்சல் செய்வது எப்படி என்று இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள். டிக்கெட்டுக்கு நீங்கள் செலுத்திய தொகை அப்படியே வரும் நம்புங்கள்.
இந்திய ரயில்வேயின் இணையதளமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்ரேஷன் பதிவு செய்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்து கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. ஆன்லைனில் பதிவு செய்த டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி ஆப் வழியாகவோ அல்லது ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ கேன்சல் செய்ய முடியும்.
கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்டின் பணம் பதிவு செய்யப்பட்ட கணக்கிற்கே திரும்ப செலுத்தப்படுகிறது. சார்ட் தயாரானபின் இ-டிக்கெட் கேன்சல் செய்ய நினைத்தால் டிடிஆர் (Ticket Deposit Receipt) படிவத்தை பூர்த்தி செய்து கேன்சல் செய்யலாம்.
irctc ticket cancel : கேன்சல் செய்யும் முறை!
1. சார்ட் தயாரவதற்கு முன் டிக்கெட்டை கேன்சல் செய்ய விரும்பினால் irctc.co.in என்ற இணைய தளத்திற்கு சென்று ‘’My Transactions’ என்ற டேப்பை திறந்து கேன்சல் செய்யலாம்.
2. ‘Booked Ticket History’ என்ற லிங்கில் உள்ள மெனு பாரை க்ளிக் செய்யவும்.
3. பதிவு செய்யப்பட்ட டிக்கெட்கள் திரையில் வரும். அதில் நீங்கள் எந்த பயணத்தை கேன்சல் செய்ய விரும்புகிறிர்களோ அந்த டிக்கெட்டை தேர்வு செய்து கேன்சல் செய்யவும்.
4. மீண்டும் ஒரு முறை கேன்சல் செய்வதை உறுதி படுத்த ‘ஓகே’ பட்டனை அழுத்தவும்.
5. வெற்றிகரமாக கேன்சல் செய்து விட்டால், கேன்சலுக்கு பிடித்தம் செய்தது போக திருப்பி கிடைக்கும் பணமும் திரையில் வரும். கேன்சல் செய்து விட்டதற்கான உறுதிப்படுத்த குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வந்து விடும்.
மூத்த குடிமக்கள் சலுகை பெற தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியம்சங்கள் :
டிக்கெட் விலை சலுகை என்பது அண், பெண் என இருபாலர் மூத்த குடிமக்களுக்கு உண்டு. 60 வயதை கடந்த ஆண்களும், 58 வயதை கடந்த பெண்களும் சலுகை பெற தகுதியானவர்கள்.
மெயில், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சதப்தி, ஜன் சதப்தி, துரந்தோ என அனைத்து ரயில்களுக்கும் இந்த விலை சலுகை பொருந்தும்.
மூத்த குடிமக்கள் சலுகையில் பயணிக்கும் பயணிகள் தங்கள் வயதிற்கான் அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு முழு விலை சலுகை, பகுதி விலை, அல்லது உண்மையான விலை என்ற 3 தேர்வுகள் இருக்கும். டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு தேவையான தேர்வை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
தட்கல் டிக்கெட் உடனே கிடைக்க வேண்டுமா? அப்ப இந்த நேரத்தில் மட்டும் புக்கிங் செய்யுங்கள்
உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட் 48 மணி நேரத்திற்குள் அல்லது ரயில் புறப்படும் 12 மணிநேரத்திற்கு முன்பு கேன்சல் செய்தால் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.