IRCTC tour package Chennai-Munnar-Thekkady Rail Tour : இந்திய ரயில்வே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்களுக்காக சூப்பர் ப்ளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இனி சென்னையில் இருந்து மூணாறு செல்வது மிக எளிது. சென்னையில் இருந்து மூணாறு செல்ல ஒவ்வொரு வாரத்திலும் வியாக்கிழமை அன்று ரயில்கள் இயக்கப்படுகிறது. இரவு 08:55 மணிக்கு இந்த ட்ரெயின் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை - மூணாறு - தேக்கடி ரயில் டூர் (Chennai-Munnar-Thekkady Rail Tour)
இந்த ரயில் டூரின் மூலம் நீங்கள் கேரளாவின் அழகான மூணாறு மற்றும் தேக்கடி போன்ற இடங்களை சுற்றிப் பார்க்க இயலும். இந்த பேக்கேஜ்ஜை நீங்கள் புக் செய்தால் ஸ்லீப்பர் க்ளாசில் பயணிக்கலாம். உணவுக்கான செலவும் நீங்கள் அளிக்கும் கட்டணத்தில் அடங்கும்.
தங்குமிடம்
மூணாறில் அர்ச்சனா ரெஸிடென்ஸி, லே செலெஸ்டியம் போன்ற விடுதிகளில் தங்க ஏற்பாடு செய்யப்படும். தேக்கடியில் மைக்கேல்ஸ் இன் (Michael's Inn) அல்லது கே.டி.டி.சி பெரியார் இல்லம் (KTDC Periyar House) விடுதிகளில் தங்க ஏற்பாடு செய்யப்படும்.
பேக்கேஜ் கட்டணம்
இருவருக்கான கட்டணமாக ரூ. 9620 வசூலிக்கப்படுகிறது. மூவர் செல்ல விரும்பினால் அவர்களுக்கான கட்டணமாக ரூ. 7370 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கான கட்டணம் ரூ. 5300 (படுக்கை வசதியுடன்) ஆகும். படுக்கை வசதி வேண்டாம் என்றால் ரூ. 4750 கட்டணமாக வசூலிக்கப்படும்.
மேலும் படிக்க : கோவாவுக்கு டூர் போறீங்களா? 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்!