/tamil-ie/media/media_files/uploads/2018/12/IRCTC-Agra-Tour.jpg)
IRCTC Agra Tour
IRCTC : கோவா, புத்திஸம் டூரிஸ்ட் பேக்கேஜ் என ஒரு கலக்கு கலக்கும் இந்தியன் ரயில்வே துறை மீண்டும் ஒரு அதிரடி பேக்கேஜ்ஜை அறிவித்துள்ளது.
விடுமுறை நாட்கள் நெருங்குவதை அடுத்து இந்தியன் ரயில்வே துறை பல்வேறு சுற்றுலா சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 400 ரூபாயில் கோவா, புத்திஸம் பயணம் என பல ஏற்பாடுகள் செய்திருக்கிறது.
IRCTC Agra Tour : 2550 ரூபாய் ஆக்ரா சுற்றுலா பயணம்
நீண்ட நாட்களாக தாஜ் மஹால் பார்க்க வேண்டும் என்ற உங்களின் ஏக்கத்தை தீர்க்க புதிய திட்டம் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி கொண்டு வந்துள்ளது. ‘Full Day Agra Tour without Guide’ என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கும் இந்த திட்டத்தின் மூலம், ஆக்ரா நகரில் இருக்கும் கோட்டை, ஃபதேபூர் சிக்ரி, தாஜ் மஹால் உட்பட பல இடங்களை நீங்கள் சுற்றிப்பார்க்கலாம்... அதுவும் வழிநடத்துபவர் துணை இல்லாமல். இந்த சுற்றுலா திட்டத்தின் முழு செலவு வெறும், 2,550 ரூபாய் மட்டுமே.
Goa Package: வெறும் 400 ரூபாய் இருந்தால் போதும்... முழு கோவாவை சுற்றிப் பார்க்கலாம்
ஆக்ரா பேகேஜ்ஜின் முழு விவரம்:
- டெல்லியின் ஆக்ரா காண்ட் ரயில் நிலையத்தில் இருந்து இந்த பயணம் தொடங்கும்.
- காலை 8.30 மணிக்கு ஆக்ரா காண்ட் நிலையத்தில் இருந்து தொடங்கும்.
- அங்கிருந்து பயணிகளுக்கு தனியாக சொகுசு பேருந்து ஏற்பாடு செய்யப்படும். இந்த பேருந்திலேயே நீங்கள் ஆக்ரா நகரத்தை முழுமையாக சுற்றிப் பார்க்கலாம்.
- இந்த பயணத்தில், உணவும் அளிக்கப்படும்.
- குறிப்பாக உங்களை பின் தொடர்ந்து வழிகாட்டி யாரும் வர மாட்டார்கள். எனவே நிம்மதியாக சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்க்கலாம்.
- இந்த பயணத்தின்போது குறிப்பிட்ட சுற்றுலா தளங்களின் நுழைவு டிக்கெட்டை உங்கள் செலவில் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
- இந்த பயணம் வெள்ளிக் கிழமை தவிர எல்லா நாட்களிலும் இயங்கும்.
குடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா ? சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.