irctc ticket cancellation : பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் புதுப்புது சேவைகளை புகுத்தி வரும் நிலையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பமசங்களை கொண்டுள்ளது. அதுக் குறித்த முழு விபரங்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக் செய்யும் போது பணப் பரிவர்த்தனை தோல்வி அடைந்து சிரமம் ஏற்படுகிறது என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
இதற்குத் தீர்வு காணும் விதமாக IRCTC iPay என்ற பேமெண்ட் கேட்வே சேவை அறிமுகம் செய்துள்ளது.
IRCTC iPay பேமெண்ட் கேட்வே சேவை மூலம் டிக்கெட்டுக்கான கட்டணத்தைச் செலுத்தும் போது எக்காரணத்தைக் கொண்டும் பரிவர்த்தனை ரத்தாகாது என்று ஐஆர்சிடிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிற பேமெண்ட் கேட்வே சேவையில் உள்ளது போன்றே ஐஆர்சிடிசியின் இந்தப் புதிய பேமெண்ட் கேட்வேயிலும் ஆன்லைன், கிரெடிட்/டெபிட் கார்டு, யூபிஐ போன்ற வழிகளில் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.
IRCTC Waitlisted Ticket Refund 2019: கேன்சல் செய்யும் வழிமுறை
1. சார்ட் தயாரவதற்கு முன் டிக்கெட்டை கேன்சல் செய்ய விரும்பினால் irctc.co.in என்ற இணைய தளத்திற்கு சென்று ‘'My Transactions' என்ற டேப்பை திறந்து கேன்சல் செய்யலாம்.
2. 'Booked Ticket History' என்ற லிங்கில் உள்ள மெனு பாரை க்ளிக் செய்யவும்.
3. பதிவு செய்யப்பட்ட டிக்கெட்கள் திரையில் வரும். அதில் நீங்கள் எந்த பயணத்தை கேன்சல் செய்ய விரும்புகிறிர்களோ அந்த டிக்கெட்டை தேர்வு செய்து கேன்சல் செய்யவும்.
4. மீண்டும் ஒரு முறை கேன்சல் செய்வதை உறுதி படுத்த ‘ஓகே' பட்டனை அழுத்தவும்.
5. வெற்றிகரமாக கேன்சல் செய்து விட்டால், கேன்சலுக்கு பிடித்தம் செய்தது போக திருப்பி கிடைக்கும் பணமும் திரையில் வரும். கேன்சல் செய்து விட்டதற்கான உறுதிப்படுத்த குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வந்து விடும்.
மூத்த குடிமக்கள் சலுகை பெற தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியம்சங்கள் :
டிக்கெட் விலை சலுகை என்பது அண், பெண் என இருபாலர் மூத்த குடிமக்களுக்கு உண்டு. 60 வயதை கடந்த ஆண்களும், 58 வயதை கடந்த பெண்களும் சலுகை பெற தகுதியானவர்கள்.
மெயில், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சதப்தி, ஜன் சதப்தி, துரந்தோ என அனைத்து ரயில்களுக்கும் இந்த விலை சலுகை பொருந்தும்.
மூத்த குடிமக்கள் சலுகையில் பயணிக்கும் பயணிகள் தங்கள் வயதிற்கான் அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு முழு விலை சலுகை, பகுதி விலை, அல்லது உண்மையான விலை என்ற 3 தேர்வுகள் இருக்கும். டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு தேவையான தேர்வை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
நீங்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டீர்கள்! இந்தியன் ரயில்வேஸ் நீங்கள் மாதம் 80 ஆயிரம் சம்பாதிக்க உதவ ரெடி!
இதேபோல் பாதி விலையில் பயணிக்க விரும்பினால், அவர்கள் 50% விலைச்சலுகையை அவர்கள் தேர்ந்தெடுத்து 50 சதவீத விலையில் பயணிக்கலாம்.
ஐஆர்சிடிசி தனது பயணிகளுக்கு வாடகை கார் வசதியையும் தருகிறது. முன்னதாக வாடகை கார் நிறுவனமான ஒலாவோடு ஐஆர்சிடிசி நிறுவனம் தனது பயணிகளுக்கு வாடகை கார் வசதியைத் தரும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும் ரயில் பயணங்களில் இருக்கும் பொழுதே தங்களுக்கு விருப்பமான உணவகங்களில் இருந்து விருப்பமான உணவைப் பெறும் வகையிலான சேவையை புட் ஆன் டிராக்(Food on Track) என்ற திறன்பேசி செயலியின் மூலம் பயணிகள் பெறலாம் என்றும் ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. பிஎன்ஆர் எண்ணை(PNR Number) வைத்து பயணிகள் உணவு தருவிக்கலாம். ஆன்லைன், ஆப்லைன், க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட், கேஷ் ஆன் டெலிவிரி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்தலாம்.
ரயில் தட்கல் டிக்கெட்டை கேன்சல் செய்தாலும் பணத்தை திரும்ப பெறலாம்...: ஆனால்....?
உணவை விற்பனை செய்யும் விற்பனையாளர் ரசீது தர தவறினால், உணவு இலவசம் என்ற புதிய கொள்கையையும் ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.