ISRO Young Scientists program : திருச்சியில் அமைகிறது இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சி மையம். இந்த ஆண்டு இஸ்ரோ மேற்கொள்ள இருக்கும் புதிய திட்டங்கள் குறித்த தகவல்களை அளித்தார் இஸ்ரோவின் தலைவர் கே. சிவன்.
ISRO Young Scientists program இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்
திருச்சியில் அமைய இருக்கும் ஆய்வு மையம், பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி குறித்த அறிவியல் பயிற்சியை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாநிலத்திலும், விண்வெளி துறையில் அதிக அளவு ஆர்வமுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகளின் மூலமாக தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பாடங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தான் இந்த பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு செயற்கைகோள் தயாரிக்கும் திட்டம் இருந்தால், இஸ்ரோவை அணுகி, அங்கிருந்து செயற்கைகோள்களை இலவசமாக விண்வெளிக்கு அனுப்பும் வசதிகளையும் உருவாக்கி வருகிறது இஸ்ரோ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவின் ஆறு பகுதிகளில் ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளது. ஜெய்பூர், கௌஹாத்தி, குருசேத்ரா, வாரணாசி, பட்னா, மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்கள் அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க : ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்ல இருக்கும் பெண்