It’s more than a symbolic tussle between Sena factions: உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் இரு பிரிவுகளும், தாங்கள் தான் உண்மையான சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் என்றும், கட்சியின் சின்னத்தின் மீதான உரிமை எங்களுக்கே என்றும் கூறி வரும் நிலையில், ”சிவசேனாவிடம் இருந்து வில் மற்றும் அம்புகளை” யாரும் பறிக்க முடியாது என முன்னாள் முதல்வர் தாக்கரே தெரிவித்துள்ளார்.
1966 ஆம் ஆண்டு மறைந்த பாலாசாஹேப் தாக்கரே சிவசேனாவை நிறுவியபோது, அது ஒரு அரசியல் கட்சி அல்ல, ஒரு அமைப்பு, “உறுமும் புலி” அதன் சின்னமாக இருந்தது. தொடர்ந்து இந்தச் சின்னத்தை சிவ சைனியர்கள் ஒவ்வொரு கட்சி அலுவலகத்திலும், சுவரொட்டிகளிலும் அல்லது அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பரவலாகப் பயன்படுத்தினர்.
இதையும் படியுங்கள்: அமர்நாத் மேகவெடிப்பு.. திடீர் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு.. 25 பேர் காயம்!
‘வில் மற்றும் அம்பு’ சின்னம், தேர்தல் ஆணையத்தால் தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டதிலிருந்து, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிவசேனாவின் அடையாளமாக இருந்து வருகிறது.
அதற்கு முன், மூத்த அரசியல் பார்வையாளர்கள் மற்றும் சிவசேனா நிர்வாகிகளின் கூற்றுப்படி, சிவசேனா வெவ்வேறு சின்னங்களில் தேர்தலில் போட்டியிட்டது. ஆரம்பத்தில் ரயில்வே என்ஜினை சின்னமாக வைத்து தேர்தலில் போட்டியிட்டது. பிறகு, அதன் தேர்தல் சின்னமாக ‘வாள் மற்றும் கேடயம்’ இருந்தது.
1984 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவசேனா கட்சி, பா.ஜ.க சின்னத்தில் போட்டியிட்டது.
1984-85ல் சிவசேனா முதன்முறையாக ‘வில் அம்பு’ சின்னத்தைப் பெற்று மும்பையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டது. காங்கிரஸின் ஆதரவைப் பெற்று மும்பை மாநகராட்சியில் சிவசேனா ஆட்சிக்கு வந்தது. 1989 ஆம் ஆண்டு தான் சிவசேனா தனது பத்திரிக்கையான சாம்னாவை ஆரம்பித்தது. அதே ஆண்டு, அக்கட்சிக்கு நிரந்தர தேர்தல் சின்னமாக ‘வில் அம்பு’ கிடைத்தது, இந்த சின்னம் இன்று இழக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
“சின்னம் கிடைத்தது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது, ஏனெனில் அதன் பிறகு சிவசேனா முதலில் மும்பை மாநகராட்சியில் ஆட்சிக்கு வந்தது, அதன்பிறகு தேர்தல்களில் வெற்றி பெற்றது மற்றும் 1995 இல் பா.ஜ.க கூட்டணியுடன் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தது” என்று சிவசேனா நிர்வாகி ஒருவர் கூறினார், மேலும், தற்போதைய நிலையில் ஒரே சின்னம் இரு பிரிவினருக்கும் இடையே உள்ள மோதலை ஏற்படுத்தி வருவது வருத்தமளிக்கிறது, என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil