ஜெய்ப்பூரில் உள்ள ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகத்தின் பெயரை மாற்ற பரிந்துரைத்து மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, ராஜஸ்தானில் காங்கிரஸை பா.ஜ.க தாக்கி வருகிறது.
இதற்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க, புதிய பெயர் "துணிச்சலான ராஜஸ்தானியர்கள் பெயரில் இருக்க வேண்டும், காந்தி குடும்பத்தின் பெயர்களில் அல்ல" என்று கூறியது.
இதையும் படியுங்கள்: ஜனநாயகத்தின் தாயான இந்தியாவை விமர்சிக்க பாகிஸ்தானுக்கு தகுதி இல்லை.. அரிந்தம் பாக்சி
“ஆல்பர்ட் ஹாலின் பெயர் விரைவில் மாற்றப்படும் என்று நம்புகிறேன். விக்டோரியா மகாராணியின் கணவர் ஆல்பர்ட். இன்று 2022ல் அவர் பெயரில் ஒரு மண்டபம் வைப்பது தவறு என்று நினைக்கிறேன். ஆல்பர்ட் ஹால் பெயரை மாற்றுமாறு முதலமைச்சரிடமும் (அசோக் கெலாட்) கூறியுள்ளேன்,” என்று ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை தௌசாவில் செய்தியாளர்களிடம் பாரத் ஜோடோ யாத்ரா பற்றிய செய்தியாளர் சந்திப்பில் கூறினார். மேலும், ஆல்பர்ட் ஹாலைப் பற்றி அறிந்து ஆச்சரியமடைந்ததாகவும் அவர் கூறினார்.
ஜெய்ராம் ரமேஷ், இது அவரது தனிப்பட்ட கருத்து என்றும், "நகைச்சுவையாக" கூறியதால், இதை "தலைப்புச் செய்தியாக" மாற்ற வேண்டாம் என்றும் மீடியாக்களிடம் கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், தான் முதல்வர் அசோக் கெலாட்டிடம் எந்த ஒரு பெயரையும் பரிந்துரைக்கவில்லை என்றும், ஏனெனில் தான் எந்த சர்ச்சையையும் உருவாக்க விரும்பவில்லை என்றும் பெயர்களுக்கு பஞ்சமில்லை என்றும் கூறினார்.
பா.ஜ.க.,வின் மூத்த எம்.எல்.ஏ.,வும், ராஜஸ்தான் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ராஜேந்திர ரத்தோர் ட்விட்டரில், ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகத்திற்கு காந்தி குடும்பத்தின் பெயரை வைக்கக்கூடாது என்று காங்கிரஸுக்கு "எச்சரிக்கை" தெரிவித்துள்ளார்.
“காங்கிரஸ் பாரத் ஜோடோ யாத்திரையை நடத்துகிறது, இப்போது, ராஜஸ்தானின் முக்கிய இடங்களின் பெயர்களை மாற்றுவதற்கு இணையான யாத்திரையையும் தொடங்குகிறது. ராஜஸ்தான் துணிச்சலானவர்களின் பூமி. ஆல்பர்ட் ஹாலின் பெயரை மாற்றினால், இளவரசர் ராகுல் காந்தியை மகிழ்விக்க காந்தி குடும்பத்தின் பெயரைச் சூட்டக்கூடாது, ”என்று ராஜேந்திர ரத்தோர் வியாழக்கிழமை ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
"ஆல்பர்ட் ஹாலின் பெயரை மாற்ற விரும்பினால் இராஜஸ்தானின் துணிச்சலான வீரர்களின் பெயரை சூட்ட வேண்டும், இதனால் நம் இளம் தலைமுறையினர் தங்கள் தாய்நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்து தேசத்திற்கு சேவை செய்ய உத்வேகம் பெற்றவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்" என்று ரத்தோர் மேலும் கூறினார்.
ராஜஸ்தான் சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளத்தின்படி, ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம் அதன் வடிவமைப்பிற்கான உத்வேகம் காரணமாக லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்திலிருந்து அதன் பெயரைப் பெற்றது.
சர் ஸ்விண்டன் ஜேக்கப் என்பவர் இந்தோ-சராசெனிக் கட்டிடக்கலை பாணியைப் பயன்படுத்தி ஆல்பர்ட் மண்டபத்தை வடிவமைத்ததாகவும், 1876 ஆம் ஆண்டில் வேல்ஸ் இளவரசர் கட்டிடத்தின் அடிக்கல்லை நாட்டினார் என்றும் வலைதளம் கூறுகிறது.
முன்னதாக, முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றியதாக காங்கிரஸ் மீது பா.ஜ.க குற்றம் சாட்டியது. அன்னபூர்ணா ரசோய் திட்டத்தின் பெயரை இந்திரா ரசோய் என்று மாற்றியதாக காங்கிரஸ் மீது முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே குற்றம் சாட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.