தடுப்பூசி, பாதுகாப்பு விவகாரங்கள் : அமெரிக்காவில் முக்கியத் தலைவர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடன் அதிபரான பிறகு அமெரிக்காவுக்குச் சென்ற முதல் இந்திய அமைச்சரவை அமைச்சர் ஜெய்சங்கர் ஆவார்.

Jaishankar meets Blinken, other top officials; US underlines Covid cooperation, India help

 Shubhajit Roy

Jaishankar meets Blinken, other top officials : வெள்ளிக்கிழமை அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி ப்ளிங்கனை சந்தித்து பேசினார். லண்டனில் மே 3ம் தேதி நடைபெற்ற ஜி-7 வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில் சந்தித்துக் கொண்ட இரு நபர்களும் தற்போது மீண்டும் சந்தித்து கொரோனா தடுப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தியா கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவில் அளவுக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. மேலும் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான மூலப் பொருட்களும் அந்நாட்டில் உள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் ஆரம்பத்தில் ஜெய்சங்கரை தன்னுடைய நண்பர் என குறிப்பிட்ட ப்ளிங்கன், இந்தியாவும் அமெரிக்காவும் பல்வேறு சமயங்களில் முக்கியமான சவால்களை எதிர்த்து ஒன்றாக பணியாற்றி வந்துள்ளது. அதில் பல நம்முடைய வாழ்வில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை எதிர்கொள்வதற்கும், காலநிலை மாற்ற சவால்களை கையாளவும், குவாட் மற்றும் ஐ.நாவின் பல சவால்களை உலகின் இந்த பகுதியில் சமாளிக்கவும் நேரடியாக நாம் இணைந்துள்ளோன் என்று அவர் கூறியுள்ளார். இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு முக்கியமானது. இது தொடர்ந்து வலுவடைந்து வருகிறது என்று நினைக்கின்றேன் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க : ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒரு அலங்கார முத்திரை போல் செயல்படுகிறது – தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.

நிறைய பிரச்சனைகள் பற்றி விவாதிக்க வேண்டும். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் வலுவாக உள்ளது. இது தொடரும் என்று நான் நம்புகின்றேன். அதே நேரத்தில் கொரோனாவின் இக்கட்டான சூழலில் இருக்கும் இந்தியாவிற்கு அமெரிக்காவின் வலுவான ஆதரவு தேவை என்பதை செயலாளருக்கும் அவர் மூலமாக அமெரிக்க நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைக்க ஒரு வாய்ப்பை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று ஜெய்சங்கர் கூறினார்.

இந்த நேரத்தில், பெருந்தொற்றின் ஆரம்ப காலத்தில் இந்தியா அமெரிக்காவிற்கு துணையாக நின்றது. அதனை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம். தற்போது இந்தியாவிற்காக அமெரிக்கா துணை நிற்கும் என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்று ப்ளிங்கன் கூறினார். கடந்த மூன்று மாதங்களில் இவ்விரு தலைவர்களும் நான்கு முறை ஆலோசனை நடத்தியிருப்பார்கள். இரண்டு வாரத்திற்குள் இருமுறையும், குவாட் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் ஆன்லைன் மூலமும் அவர்கள் பேசியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் ஜெய்சங்கர் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்ரின் தை, தேசிய புலனாய்வு இயக்குநர் அவ்ரில் ஹைன்ஸ், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளைச் சேர்ந்த அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க தொழிலதிபர்களை வாஷிங்டனில் சந்தித்து பேசியுள்ளார். தடுப்பூசிகள், சமகால பாதுகாப்பு தொடர்பான சவால்கள், வலுவான விநியோக சங்கலி போன்றவை குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது. ரீட் அவுட் ஏதும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு வழங்கப்படவில்லை என்ற போதிலும், தடுப்பூசி குறித்து பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாத இறுதிக்குள் அமெரிக்காவில் கூடுதலாக இருக்கும் 60 மில்லியன் அஸ்ட்ரெஜெனகா மற்றும் 20 மில்லியன் இதர தடுப்பூசிகளை தேவைப்படும் நாடுகளுக்கு வழங்கப்படும் என்று ஜோபைடன் அறிவித்ததை தொடர்ந்து ஜெய்சங்கர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த 80 மில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்கா எவ்வாறு விநியோகிக்கும் என்று இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் இந்தியா ஒரு முக்கிய பயனாளியாக இருக்கும். ஆஸ்ட்ரெஜெனாகாவிற்கு அமெரிக்காவில் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை. அஸ்ட்ரஜெனகா மற்றும் ஜே & ஜே தடுப்பூசிகளை தயாரிக்கும் பல்டிமோர் தொழிற்சாலையில் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

“ஜேக் சல்லிவனை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தோ-பசிபிக் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பரந்த விவாதங்கள். கோவிட் சவாலை எதிர்கொள்வதில் அமெரிக்க ஒற்றுமைக்கு பாராட்டு தெரிவித்தார். இந்தியா-அமெரிக்க தடுப்பூசி கூட்டு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் ”என்று ஜெய்சங்கர் கூட்டத்திற்குப் பிறகு ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.

நம் மக்களிடமிருந்து மக்கள் உறவுகள் (people-to-people ties) மற்றும் எங்கள் மதிப்புகள் அமெரிக்க-இந்தியா கூட்டாட்சியின் அடித்தளமாகும், மேலும் இது தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரவும், காலநிலைக்கு இட்டுச் செல்லவும், இலவச மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதியை ஆதரிக்கவும் உதவும்” என்று சல்லிவன் ட்விட்டரில் எழுதினார் .

”வலுவான விநியோகத்தில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஆதரவு குறித்து அவருடைய நேர்மறையான கருத்துகளை வரவேற்கின்றேன் என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்ரின் தை உடனான சந்திப்புக்குப் பிறகு, ஜெய்சங்கர் ட்வீட் செய்தார்.

பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், உலக வர்த்தக அமைப்பில் (WTO) கோவிட் -19 தடுப்பூசிகளின் சில ஐபி அம்சங்களைத் தள்ளுபடி செய்வதற்கான இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் நடவடிக்கைக்கு ஆதரவை அறிவித்திருந்தார் கேத்ரின்.

சமகால சவால்கள், இருநாட்டிற்கும் இடையேயான பாதுகாப்பு கூட்டணி மேலும் வளர்ச்சி அடைவது குறித்தும் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லோய்ட் ஆஸ்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜெய்சங்கர் தெரிவித்தார். ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடன் அதிபரான பிறகு அமெரிக்காவுக்குச் சென்ற முதல் இந்திய அமைச்சரவை அமைச்சர் ஜெய்சங்கர் ஆவார்.

ஜெய்சங்கர் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் மற்றும் அமெரிக்க இந்திய மூலோபாய மற்றும் கூட்டாளர் மன்றம் நடத்திய உயர்மட்ட அமெரிக்க வணிகத் தலைவர்களுடனும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். எவ்வாறாயினும், பங்கேற்பாளர்கள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அல்லது மூலப்பொருள் சப்ளையர்கள் இந்த கூட்டங்களில் ஒரு பகுதியாக இருந்தார்களா என்பது குறித்து தெரியவில்லை.

ஜெய்சங்கர் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் செல்வாக்குமிக்க அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து குவாட் பற்றிய முன்னேற்றங்கள் மற்றும் அவர்களுடன் தடுப்பூசிகளின் ஒத்துழைப்பு பற்றி விவாதித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jaishankar meets blinken other top officials us underlines covid cooperation india help

Next Story
தடுப்பூசி கொள்முதல் : ஏலமெடுக்க வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள் ; அதிரவைத்த தடுப்பூசி உற்பத்தியாளர்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com