அரசியலமைப்பின் 370வது பிரிவு மாற்றப்பட்ட பிறகு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான காலக்கெடுவும் வரைபடமும் உள்ளதா என்று உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று மத்திய அரசிடம் கேட்டது.
“தேசத்தைப் பாதுகாப்பதே முக்கிய அக்கறை என்றால், இவை தேசியப் பாதுகாப்பின் விஷயங்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.... ஆனால், உங்களை ஒரு கட்டுக்குள் வைக்காமல், நீங்களும் அட்டர்னி ஜெனரலும் மிக உயர்ந்த மட்டத்தில் அறிவுறுத்தல்களை கேட்டுப் பெறலாம், அதாவது இதுதொடர்பாக ஒரு காலக்கெடு இருக்கிறதா?... ஒரு சாலை வரைபடம் உள்ளதா?,” என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை தாங்கிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் அடங்கிய சட்டப்பிரிவு 370 தொடர்பான மனுக்களை விசாரிக்கும் பெஞ்ச், மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கேட்டது.
இதையும் படியுங்கள்: இந்திய பகுதியை உள்ளடக்கி புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனா: மோடி மீது எதிர்க் கட்சிகள் தாக்கு
மாநிலங்களின் மறுசீரமைப்பு குறித்து துஷார் மேத்தா, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சில், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான சட்டப்பிரிவு 370 மாற்றங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துக் கூறியபோது இந்தக் கேள்வி வந்தது.
அப்போது தலைமை நீதிபதி, “யூனியன் பிரதேசங்களை உருவாக்குவதை நாங்கள் பார்க்கும்போது, பஞ்சாபிலிருந்து பிரித்து யூனியன் பிரதேசமாக இருக்கும் சண்டிகர் போன்ற உதாரணங்களை நீங்கள் ஒருபுறம் வைத்திருக்கிறீர்கள். சில பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக மாறும் முன்னேற்றம் உங்களிடம் உள்ளது... ஆனால் அவற்றை உடனடியாக மாநிலங்களாக மாற்ற முடியாது." என்று கூறினார்.
தேசிய பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தை அனுமதிக்கக் கூடாதா என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். “ஒரு மாநிலத்தைப் பொறுத்தவரை, தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் எங்களுக்கு இதுபோன்ற ஒரு தீவிரமான சூழ்நிலை உள்ளது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று மத்திய அரசால் ஏன் சொல்ல முடியவில்லை. ஆனால் இது நிரந்தரமானது அல்ல, இது மீண்டும் ஒரு மாநிலமாக மாற்றப்படும்... என்று கூற முடியதா? ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மத்திய அரசு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்காமல் இருக்க முடியுமா? ஏனென்றால், அதை எதிர்கொள்வோம், அது ஒரு மாநிலமாக இருந்தாலும் சரி, யூனியன் பிரதேசமாக இருந்தாலும் சரி, ஒரு தேசம் உயிர் பிழைத்தால் நாம் அனைவரும் பிழைப்போம்,” என்று தலைமை நீதிபதி கூறினார்.
"ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, தேசத்தின் பாதுகாப்பின் நலன்களுக்காக, ஒரு மாநிலம் மீண்டும் மாநில அந்தஸ்துக்கு திரும்பும் என்ற தெளிவான புரிதலின் பேரில், இந்த குறிப்பிட்ட மாநிலம் யூனியன் பிரதேசமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என பாராளுமன்றத்தை முன்வைக்க அனுமதிக்க வேண்டாமா?," என்று தலைமை நீதிபதி கூறினார், "அந்த முன்னேற்றம் நடக்க வேண்டும் என்று அரசாங்கம் எங்களுக்கு முன் ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும். இது நிரந்தரமாக யூனியன் பிரதேசமாக இருக்க முடியாது,” என்று தலைமை நீதிபதி கூறினார்.
துஷார் மேத்தா, "அதுதான் நாடாளுமன்றத்தில் (உள்துறை அமைச்சரால்) செய்யப்பட்ட அறிக்கை" என்று விளக்கினார்.
"அதேபோல், ஜனநாயகத்தை மீட்டெடுப்பதும் முக்கியம்" என்று தலைமை நீதிபதி கூறினார்.
உள்ளாட்சி தேர்தல் 2020ல் நடந்ததாக துஷார் மேத்தா சுட்டிக்காட்டினார்.
தலைமை நீதிபதி, "முன்னேற்றம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்ற உங்கள் கருத்தை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்" என்று கூறினார், மேலும் மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பு எழுந்து, துஷார் மேத்தாவை சாலை வரைபடத்தை விளக்குமாறு கேட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.