”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்

ஒரு மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் பள்ளிப்படிப்பை தொடர்வது குறித்து கௌரவம் ஏதும் பார்க்காமல் முயற்சி மேற்கொள்வதே நல்ல விஷயம் தான்.

By: Updated: August 11, 2020, 01:52:31 PM

Jharkhand HRD minister Jagarnath Mahto joins class 11th : ஜார்கண்ட் மாநிலத்தின் மனிதவளத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார் ஜகர்நாத் மஹ்தோ. அவர் தற்போது தேவி மஹ்தோ இண்டெர் காலேஜில் 11ம் வகுப்பு படிக்க விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்துள்ளார்.

போகாரோ மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த அரசு உதவி பெரும் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடர உள்ளார் அமைச்சர். 53 வயதாகும் ஜகர்நாத் 1995ம் ஆண்டு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

மேலும் படிக்க : இந்திய ஹாக்கி வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா – குறைந்த ஆக்சிஜன் அளவு

இவருடைய கல்வி தகுதி குறித்து பொதுமக்கள் மட்டுமின்றி, தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற நாளில் இருந்து என் மீது வைக்கப்படும் தொடர் விமர்சனங்கள் காரணமாக இந்த முடிவை மேற்கொண்டதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த முயற்சியை பலரும் மனம் உவந்து பாராட்டி வருகின்றனர். ஒரு மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் பள்ளிப்படிப்பை தொடர்வது குறித்து கௌரவம் ஏதும் பார்க்காமல் முயற்சி மேற்கொள்வதே நல்ல விஷயம் தான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Jharkhand hrd minister jagarnath mahto joins class 11th

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X