தேசிய முகாமுக்கு ரிப்போர்ட் செய்ய பெங்களூரு வளாகத்திற்கு வந்த வீரர்களில் கோவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்ட ஆறாவது இந்திய வீரரானார் ஹாக்கி வீரர் மன்தீப் சிங். வெள்ளிக்கிழமை, கேப்டன் மன்பிரீத் சிங், கோல்கீப்பர் கிரிஷன் பதக், தடுப்பாட்டக்காரர் வருண் குமார், மற்றும் சுரேந்தர் குமார், மற்றும் மிட்பீல்டர் ஜஸ்கரன் சிங் ஆகிய ஐந்து வீரர்களும் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
Sports Authority of India’s அறிக்கையின் படி, மன்தீப் சிங்கிற்கு வைரஸ் பாதித்ததற்கான எந்தவித அறிகுறியும் தெரியவில்லை. கொரோனா பாதித்த சக ஐந்து வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களே, மன்தீப் சிங்கிற்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குறைந்த ஆக்சிஜன் அளவு
அவரது இரத்த ஆக்ஸிஜன் அளவு இயல்பை விடக் குறைந்து வருவது கண்டறியப்பட்டதை அடுத்து, மன்தீப் நேற்று இரவு எஸ்.எஸ். ஸ்பார்ஷ் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சமீபத்திய தகவல்களின்படி, அவரது நிலை தற்போது சீராக உள்ளது.
சென்னையில திட்டமிடுறோம் ; துபாயில கப்பை தூக்குறோம் – CSK அசத்தல் திட்டம்
தேசிய அணி வீரர்களுக்கு பயிற்சியிலிருந்து ஒரு மாத கால இடைவெளி வழங்கப்பட்டது, இது 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும் இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவரவர் வீடுகளில் ஒரு மாதத்தை கழித்த பின்னர் கடந்த வாரம் மையத்திற்கு திரும்பிய அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள், அவர்களின் தனிமைப்படுத்தல் முடிந்ததும் மற்றொரு கோவிட் -19 சோதனை எடுக்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.
ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தவிர, ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் மற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இடைவேளையின் போது அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர். திரும்பி வந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கொரோனா நெகட்டிவ் கண்டறியப்பட்டால், அவர்கள் SAI மற்றும் ஹாக்கி இந்தியா வகுத்துள்ள நிலையான இயக்க முறைப்படி படி மீண்டும் முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். தனி நபர் இடைவெளியுடன் பயிற்சி நடத்தப்படலாம். படிப்படியான தளர்வுகள் பின்னர் அடுத்தக் கட்டங்களில் அனுமதிக்கப்படும்.
ஆனால் அவர்கள் அடுத்த சில மாதங்களை வளாகப் பயிற்சியில் செலவிடுவார்கள் என்றாலும், இரு அணிகளுக்கும் சர்வதேச போட்டிகள் எதுவும் இருக்காது. டாக்காவில் நவம்பர் 17 முதல் 27 வரை நடைபெறவுள்ள ஆண்கள் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஒத்திவைக்கப்பட உள்ளது என்று ஆசிய ஹாக்கி கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி தயாப் இக்ரம் தெரிவித்துள்ளார்.
துணைக் கண்டத்தில் அதிகரித்து வரும் பாதிப்புகளின் எண்ணிக்கையும், பயணக் கட்டுப்பாடுகளும், திட்டமிட்டபடி போட்டியை நடத்துவது அவர்களுக்கு மிகவும் கடினமாகிவிட்டது என்று இக்ரம் கூறினார். ஜூன் 14 முதல் 21 வரை தென் கொரிய நகரமான டோங்ஹேயில் நடைபெறவிருந்த மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஏற்கனவே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கேமராக்கள் மெய்மறந்து பந்தை நோக்க சடாரென இடி சத்தம் – ஃபீல்டருக்கு வந்த சோதனை!
"பங்கேற்கும் அனைத்து அணிகளுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், நிலைமையை மிக நெருக்கமாக கண்காணிக்கிறோம். நாங்கள் தொடரை சற்று தள்ளி வைக்க ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது, ”என்று லாகூரிலிருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் இக்ரம் கூறினார். ஒத்திவைக்கப்பட்ட போட்டி டாக்காவில் நடைபெறும் என்று அவர் மேலும் கூறினார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜூனியர் உலகக் கோப்பைக்கான தகுதிப் போட்டிகள் மற்றும் ஜூனியர் ஆசிய கோப்பையின் தலைவிதியும் தீர்மானிக்கப்படவில்லை. ஆண்கள் தொடர் ஜூன் மாதம் டாக்காவில் நடைபெற இருந்தது, பெண்கள் தொடர் ஏப்ரல் மாதம் ஜப்பானின் ககாமிகஹாராவில் திட்டமிடப்பட்டது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்கள் அணிக்கான அடுத்த சர்வதேச போட்டி ஏப்ரல் 2021 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு போட்டிகள் நிறுத்தப்பட்டன, ஆனால் அடுத்த மாதம் ஐரோப்பாவில் மீண்டும் தொடங்க உள்ளது. ஏப்ரல் மாதத்தில்ம் ஒன்பது அணிகள் கொண்ட போட்டியில் இந்தியா மீண்டும் பங்கேற்கும்.
புரோ லீக்கின் ஒரு பகுதியாக இல்லாத பெண்கள் அணிக்கு ஒரு நிலையான அட்டவணை இல்லை. இரு அணிகளும் அடுத்த ஆண்டு சில போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் என்று தெரிய வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.