Advertisment

'ஜெய் ஸ்ரீ ராம்' கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்? - குடும்பத்தினர் கேள்வி

Mob Lynching : சரியான முறையில் பிரச்சனையை கையாளாத இரண்டு காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம் என எஸ்.பி. கார்த்தி அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jharkhand Mob Lynching, Jharkhand Man Tabrez Ansari Assault Case

Jharkhand Mob Lynching

 Abhishek Angad

Advertisment

Jharkhand Man Tabrez Ansari Assault Case : ஜார்கண்ட் மாநிலத்தில் 22 வயது மிக்க தப்ராஸ் அன்சாரி என்ற இளைஞனை திருடன் என்று கூறி ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி அடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். பின்பு அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, உடல்நிலை சரியில்லாமல் போகவே சர்தார் மருத்துவமனைக்கும் பிறகு டாட்டா மெய்ன் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

காவல்துறை விசாரணையின் போது காவல்துறையினர், அன்சாரி திருடச் சென்றாரா என்பதற்கான வாக்கு மூலத்தை மட்டுமே பதிவு செய்துள்ளனர். ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமன் என்றும் கூறச் சொல்லி அன்சாரியை வதைத்த வீடியோ குறித்து எங்கும் காவல்துறையினர் சுட்டிக்காட்டவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அன்சாரி இறந்தவுடன், இந்த சம்பவம் நடைபெற்ற கட்கிதி கிராமத்தை சேர்ந்த 11 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க : “ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…

Jharkhan Man Tabrez Ansari Assault Case - 10 பேர் கைது 2 காவல்துறையினர் பணியிடை நீக்கம்

இது குறித்து சராய்கேலா - கர்சவன் மாவட்ட எஸ்.பி. கார்த்திக் கூறுகையில், அன்சாரியை தாக்கிய பொதுமக்களில் 10 நபர்களை நாங்கள் கைது செய்திருக்கின்றோம். கர்சவன் பகுதி காவல்நிலையமும், துணை காவல் ஆய்வாளரும் இந்த சூழலில் பதட்டத்தை சரியாக கையாளவில்லை. மேலும் இது குறித்து முறையாக மேல் அதிகாரிகளுக்கு தகவல்கள் அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அன்சாரியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஏன் காவல்துறையினர் அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்கவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  அன்சாரி மீது கட்கிதி கிராமத்தை சேர்ந்த கமல் மஹ்தோவும் சரி, அன்சாரியின் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் சரி, அன்சாரியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கூறவே இல்லை. தற்போது காவல்துறையினர் கமலையும் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறச் சொல்லி கட்டி வைத்து தாக்கப்பட்ட ஜார்கண்ட் இளைஞர் மரணம்…

டி.எஸ்.பி. அதிகாரி ஒருவர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து அன்சாரியின் வழக்கினை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றோம். சரியான முறையில் பிரச்சனையை கையாளாத இரண்டு காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம் என எஸ்.பி. கார்த்தி அறிவித்துள்ளார். விசாரணையின் போது, அன்சாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அவர் குற்றச்சாட்டு முன்வைக்காமலும் இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

அன்சாரி காவல்நிலையத்தில் இருக்கும் போது, அவரை காண அவருடைய மாமா மக்சூத் ஆலம் சென்றுள்ளார். அங்கு அவர் மிகவும் தாக்கப்பட்டு, பலவீனமாக இருந்ததாக அறிவித்த அவர், எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது அன்சாரி தாக்குதல் குறித்து எதுவும் பேசாமல் போனது. மேலும் காவல்துறையினர் ஒருவருக்கு கூட, அவன் ஈவிரக்கமில்லாமல் தாக்கப்பட்டது தெரியவில்லையா என்று வருத்தத்துடன் கேட்கிறார்.

திருடப்பட்டது தொடர்பாக அன்சாரி அளித்த வாக்குமூலத்தில் தானும் தன்னுடைய கூட்டாளிகளான நுமய்ர் மற்றும் இர்பான் ஆகியோர் சுவர் தாண்டி குதித்து, ஒரு வீட்டில் சென்று பைக்கை திருடியதாகவும், அந்த பைக்கில் ரெஜிஸ்டர் நம்பர் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்லார்.

மற்றொரு இடத்தில் சுவர் ஏறி குதித்து ஒரு மணி பர்சை மட்டும் திருடியதாகவும், அதில் வெறும் 200 ரூபாய் இருந்ததாகவும் கூறியுள்ளார். பணம் குறைவாக இருந்த காரணத்தால், மூன்றாவது இடத்தில் திருட முற்பட்டுள்ளனர். கதவிடுக்கில் ஏற்பட்ட சத்தம் அவ்வீட்டாரை எழுப்பிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அன்சாரியை தாக்கிய ஊர் பொதுமக்கள் மீது கொலை மற்றும் தாக்குதலுக்கான தண்டனைப் பிரிவுகளான ஐ.பி.சி. 302 மற்றும் 295ஏவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சனை காரணமாக மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும் எதிர்கட்சியினருக்கும் மத்தியில் கடுமையான கருத்து மோதல் உருவாகியுள்ளது.

Jharkhand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment