காஷ்மீர் விவகாரம் : கொஞ்சம் கொஞ்சமாக தடைகள் நீக்கப்படும்

இங்கு அதிகாரிகள் தடையினால் வரும் பிரச்சனைகளை மட்டும் பார்க்கவில்லை. அதை தாண்டியும் இங்கு நிலவும் பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது/...

 Bashaarat Masood, Deeptiman Tiwary

JK administration eases restrictions in a phased manner : காஷ்மீர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 9 நாட்களுக்கும் மேலான நிலையில், தற்போது தடைகள் அனைத்தும் எப்போது நீக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. மாவட்ட ஆட்சியர்களின் உதவிகளுடன் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் தடைகள் நீக்கப்பட்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  தடைகளால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் இழப்புகளை கருத்தில் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக தடைகள் நீக்கப்படும் என்றும், காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு தான் அனைத்தையும் விட மிக முக்கியமானது என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க : 
ஜம்மு-காஷ்மீர் அரசின் செய்தித் தொடர்பாளர் மற்றும் தலைமை செயலாளர் ரோகித் கன்சால் அறிவிக்கையில், “ஜம்முவில் போடப்பட்ட அனைத்து தடைகளும் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டன. ஆனால் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் அந்த தடை இன்னும் நீடிக்கும். சுதந்திர தின ஒத்திகைகள் இன்று பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பின்னர், மேலும் பல்வேறு இடங்களில் தடைகள் நீக்கப்படும் என்றும் அறிவித்தார்.

JK administration eases restrictions in a phased manner

இந்த தடைகளினால் அனைவரும் படும் அனைத்து இடர்பாடுகள் குறித்தும் நாங்கள் அறிவோம். அது மிகவும் சென்சிடிவாகவே இருக்கிறது. ஆனாலும் 370 நீக்கத்திற்கு பிறகு, பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தே, அதனைத் தடுக்க, தடைகள் நீடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற தடைகள் காஷ்மீரில் நீடிப்பது ஒன்றும் புதிதில்லை. 2016ம் ஆண்டு புர்ஹான் வானி கொல்லப்பட்ட பின்பு ஏற்பட்ட கலவரங்களில் பல நபர்கள் உயிரிழந்தனர். அந்த காலத்திலும் தொடர் தடைகள் மாதக்கணக்கில் அமல்படுத்தப்பட்டடது என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த தலைவர் அறிவித்தார். இங்கு அதிகாரிகள் தடையினால் வரும் பிரச்சனைகளை மட்டும் பார்க்கவில்லை. அனைத்து முக்கியமான பிரச்சனைகளையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.

உள்ளூர் நிர்வாகிகளின் உத்தரவின் பெயரிலேயே காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் உத்தரவின் பேரில் தான் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அவர்கள் அரசியல் கைதிகள் அல்ல என்றும் உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் முக்கிய அதிகாரி அறிவித்துள்ளார்.  சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு நாட்டு மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் மக்கள் குறித்தும் அறிந்து வருகிறது உள்துறை அமைச்சகம். தொலைத்தொடர்பு அமைச்சகத்தினர் அதனை கண்காணித்து வருகின்றனர்.

கடந்த வாரம் மட்டும் ஸ்ரீநகர் மாவட்டத்தில் 13,500 நபர்கள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றனர். 1400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆயில் ட்ரக்குகள் செயல்பட்டுள்ளன.  நாட்டின் மற்ற பகுதிகளில் நடைபெறுவதைப் போன்றே இங்கும் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :காஷ்மீர் விவகாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரத்யேக புகைப்படத் தொகுப்பு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close