JNU days of Finance Minister Nirmala Sitharaman, External Affairs Minister S Jaishankar : 2வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் தமிழ் பிரதிநிதிகளாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர் கர்நாடகா மாநிலங்களவை உறுப்பினர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்ஷங்கர்.
நிர்மலா சீதாராமன் கடந்த ஆட்சியின் போது பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்திராகாந்திக்குப் பிறகு ராணுவ அமைச்சராக பொறுப்பேற்ற பெண் அமைச்சர் என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்டார். இம்முறையோ இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
JNU days of Finance Minister Nirmala Sitharaman, External Affairs Minister S Jaishankar
2014ல் வெளியுறவுச் செயலாளராக செயல்பட்டு வந்த ஜெய்ஷங்கர் இந்த ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த அமைச்சரவையில் சிவில் அதிகாரியில் இருந்து அமைச்சரான ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரு பல்கலைக்கழகமும், இந்தியாவே வியந்து பார்க்கும் இரண்டு அமைச்சர்களும்
இருவரும் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள் என்பது தான் இவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை. தன்னுடைய பசுமையான நினைவுகளை நிர்மலா சீதாராமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தன்னுடைய 7 நண்பர்களுக்கு மத்தியில், பின்னிய கூந்தலும், அழகான புடவை சகிதம் அமர்ந்திருக்கிறார்.
ஜெய்ஷங்கரோ தன்னுடைய ஜே.என்.யூ நினைவுகளை குறிப்பிடுகையில் ”இந்த இடம் என்னுடைய அறிவுப்பாதையை மாற்றியது. உலக அரசியலில் என்னுடைய ஆர்வத்தினை அதிகப்படுத்தியது என்று கூறுகிறார். ஜே.என்.யூ உங்களை சிந்திக்க வைக்கவும், அது குறித்து பேச வைக்கவும் செய்யும்.
மேலும் படிக்க : ஜெய்சங்கர் அமைச்சரான கதை : அமெரிக்க நிகழ்வால் மோடி மனதில் இடம் பிடித்தார்
நிர்மலா சீதாராமன்
பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் பாடப்பிரிவில் (Centre of Economic Studies and Planning (CESP)) முதுகலை பட்டம் படிப்பதற்காக ஜே.என்.யூவில் இணைந்தார் நிர்மலா. பின்பு சர்வதேச படிப்புகளில் எம்.பில் பட்டம் பெற்றார். 1982ம் ஆண்டும் பி.எச்.டி பட்டம் படிக்க பதிவு செய்தார். ஆனால் அதனை அவர் முடிக்கவில்லை. நிர்மலா சீதாராமன் தன்னுடைய காதல் கணவர் பரகலா பிரபாகரை சந்தித்த இடமும் இது தான். நிர்மலா சீதாராமன் 2004ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார்.
ஜெய்சங்கர்
ஜெய்சங்கர் இதே பல்கலைக்கழகத்தில் அரசியல் கல்வி (Political Science) முதுகலைப் பட்டம் பெற்றார். சர்வதேச உறவுகள் பாடப்பிரிவில் (International Relations) எம்.பில் பட்டம் பெற்றார். 1981ம் ஆண்டில் இவர் இங்கு பி.எச்.டி பட்டம் பெற்றார். ஜெய்ஷங்கர் தன்னுடைய முதல் மனைவியை இந்த பல்கலைக்கழகத்தில் தான் சந்தித்தார்.
1977ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் ஆஃபிசராக பதவி ஏற்றுக் கொண்ட ஜெய்சங்கரை மோடி தன்னுடைய புதிய அமைச்சரவையில் வைத்துக் கொண்டது இன்றும் ஆச்சரியம் அளிக்கின்றது. எந்த கட்சியிலும் தற்போது ஜெய்சங்கர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் இருந்தே வலதுசாரிகள் அமைப்பில் ஆர்வம் கொண்டிருந்தனர் இந்த இரண்டு அமைச்சர்களும் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஜே.என்.யூவின் ஃப்ரீ திங்கர்ஸ் (free thinkers) என்று அறியப்பட்டவர்கள். இடதுசாரி கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் எதிர்த்தவர்கள்.
மலரும் நினைவுகள்
இவர்கள் இருவரைப் பற்றியும் அந்த பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் எஸ்.கே. சோபோரி கூறுகையில், ஜெய்ஷங்கர் மற்றும் நிர்மலா சீதாராமனின் வளர்ச்சி என்பது இந்த பல்கலைக் கழகம் அவர்களை மாற்றிய விதம் தான்.
நிர்மலா ஜே.என்.யூவில் அடியெடுத்து வைக்கும் போது மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட பெண்மணியாக இருந்தார். அவருடன் படித்த சக மாணவர் பிரபாகர் என்பவர் ஆக்ட்விஸ்ட்டாக இருந்தார். அவரையே பின்னாளில் திருமணம் செய்து கொண்டார் நிர்மலா. பிரபாகர் காங்கிரஸ் மீது ஈர்ப்பு கொண்டவர். நிர்மலாவோ ஃப்ரீ திங்கர். இருவேறு அரசியல் சித்தாதங்கள் கொண்ட இருவர் இந்த வளாகத்தில் பார்த்து, காதலித்து மணமும் முடித்துக் கொள்வது நன்றாக இருக்கிறது. இது தான் இந்த கல்லூரிக்கான அழகும் கூட என்கிறார் துணை வேந்தர்.
பேச்சாற்றலால் அனைவரையும் ஈர்த்த ஜெய்ஷங்கர்
கல்ச்சுரலுக்கான விவாதமாக இருந்தாலும் சரி, அரசியல் தர்க்கங்களை ஒரு கை பார்க்கும் விவாதங்களாக இருந்தாலும் சரி அங்கு மிகச்சிறந்த பேச்சாளராக அமர்ந்திருப்பார் ஜெய் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை வளர்த்துக் கொள்வதில் குறிப்பாக சிவில் சர்வீஸில் தேர்ச்சி அடைவதில் அதிக நாட்டம் செலுத்தி கல்வியைக் கற்று தன்னை வளர்த்துக் கொண்டார். வகுப்பில் எப்போதுமே முதல் மாணவராக வலம் வந்தவர் ஜெய்சங்கர் என்று நினைவு கூறுகிறார் அவருடைய நண்பர் சஞ்சயா பாரு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.