‘பிரதமர் மோடி உலகளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்தும் பன்முக மேதை’ – நீதிபதி அருண் மிஸ்ரா

கண்ணியமான மனிதர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதே எங்களது முக்கியமான நோக்கம். பல்வேறு துறைகளைப் பற்றி நன்கு தெரிந்த அறிவாளியான பிரதமர் மோடிக்கு இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்

By: February 22, 2020, 6:23:59 PM

பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு துறைகளைப் பற்றி நன்கு அறிந்த அறிவாளி எனவும் உலக அளவில் சிந்தித்து உள்நாட்டிற்கு ஏற்றவாறு செயல்படுத்தக்கூடியவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா.

2020ஆம் ஆண்டிற்கான சர்வதேச நீதித்துறை மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. அதில், 20 நாடுகளில் இருந்து பல நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

டெல்லி இந்திராகாந்தி ஏர்போர்ட்டுக்குப் போறீங்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கங்க

விழாவை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் கலந்துகொண்டு பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, நீதித் துறைக்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவில் ஏற்படும் நெருக்கடிகள் சாதாரணமானவை. இருந்தாலும், நீதித்துறை, இந்த உலகத்தை சீரமைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கண்ணியமான மனிதர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதே எங்களது முக்கியமான நோக்கம். பல்வேறு துறைகளைப் பற்றி நன்கு தெரிந்த அறிவாளியான பிரதமர் மோடிக்கு இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். அவர், உலக அளவில் சிந்தித்து, அதனை நம் நாட்டிற்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்துவார்” என புகழாரம் சூட்டினார்.

மேலும், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு எனவும் உலகில் உள்ள மக்கள், இந்தியா எப்படி இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்று வியந்து பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல், சர்வதேச அளவில் மிகவும் பொறுப்பான மற்றும் மிகவும் நட்பான நாடு இந்தியா எனவும் குறிப்பிட்டார்.

உ.பி சோன்பத்ரா மாவட்டத்தில் 3,000 டன் தங்க படிமங்கள், மதிப்பு ரூ.12 லட்சம் கோடி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Justice arun mishra about pm modi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X