Advertisment

நீதிமன்ற தாமதத்தால் நானும் பாதிக்கப்பட்டேன்- உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி

மிகவும் சுதந்திரமான, பயமற்ற நீதிபதி, பல்வேறு முக்கியமான வழக்கின் தீர்ப்பில் மாறுபட்ட கருத்தினையும் பதிவு செய்தவர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Justice Banumathi says she herself was victim of court delay

Justice Banumathi says she herself was victim of court delay : உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பானுமதி ஜூலை 19ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.  அவர் தன்னுடைய ஃபேர்வெல் நிகழ்வில் பேசிய போது நீதிமன்ற தாமதத்தால் தானும் தன்னுடைய குடும்பமும் பாதிக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.  பேருந்து விபத்து ஒன்றில் உயிரிழந்த தன் தந்தையின் மரணத்திற்கான நிவாரண  நிதியை பெறவது மிகவும்  சட்ட சிக்கலான காரியமாக இருந்தது என்றும் கூறியிருந்தார்.

Advertisment

வெள்ளிக்கிழமை தன்னுடைய இது நீதிமன்ற விவகாரங்களில் பங்கேற்று விட்டு பின்னர் தன்னுடைய பிரியாவிடை நிகழ்வில் பேசினார். அவர் அப்போது தேவையே இல்லாமல் மலையளவு தடைகள் இருக்கிறது என்று கூறினார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதித்துறையில் பணியாற்றியுள்ளார் பானுமதி.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நிகழ்ந்த நிர்பயா கொலைவழக்கில் மிகவும் முக்கியமான வரலாற்றுப்பூர்வமான தீர்ப்பினை வெளியிட்டவர் நீதிபதி பானுமதி. நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வரை அந்த நீதிமன்ற அமர்வின் தலைமை பொறுப்பு வகித்தார் பானுமதி. 5 உறுப்பினர்கள் கொண்ட கொல்லீஜியத்தின் ஒரு உறுப்பினர் இவர் மேலும் இந்த உயரத்தை அடைந்த 2வது பெண் நீதிபதி அவர்.

சமீபத்தில் முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் உறுப்பினருமான ப.சிதம்பரம் சம்பந்தப்பட்ட அரசியல் ஊழல் வழக்கு ஒன்றை விசாரித்தார் பானுமதி. வெபினாரில் பங்கேற்ற பானுமதி முப்பது ஆண்டுகள் நீண்ட சேவை குறைத்தும், அவருடைய தந்தையின் மரணம் மற்றும் அவருக்கு கிடைக்க வேண்டிய நிவாரண நிதி தாமதமானது குறித்தும் அவர் கூறினார்.

பானுமதி ஓய்வு பெறும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்து மல்ஹோத்ரா மற்றும் இந்திரா பானர்ஜீ மட்டுமே பெண் நீதிபதிகளாக இருப்பார்கள். இதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் மூன்று பெண் நீதிபதிகள் இருந்த வரலாறு இல்லை.

தனது பிரியாவிடை உரையில், அரசாங்கம் மற்றும் நீதித்துறை, இந்த துறையின் அதிக செயல்திறனை உறுதி செய்வதற்கும், நீதிக்கான அணுகலுக்கு உதவுவதற்கும் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளைப் பாராட்டினார். நான் நீதித்துறையில் நுழைந்த போது, தற்போது இருக்கும் எந்த விதமான தொழில்நுட்பமும் அன்று இல்லை. இன்றைய நாளில், எல்லோரும் வழக்குகள் நிலுவையில் இருப்பதைப் பற்றி பேசுகிறார்கள், மேலும் அவர்கள் நிலுவையில் இருப்பது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்றும் அவர்கள் கூறூகிறார்கள். உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வலிமைகளை அதிகரிப்பது போன்ற பல்வேறு சட்டங்கள், நகர்வுகள் பெரும் மாற்றங்களை உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்க : சென்னையில் நாளுக்கு நாள் உயரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை!

நீதிமன்றங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் அணுகுதல் ஆகியவற்றை அதிகரிக்க நிறைய குடிமக்களை - மையப்படுத்திய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அவர் மிக விரைவில் கொரோனா வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார். அனைத்து மதங்களையும் மதிப்பதாக கூறிய அவர் தான் ஒரு இந்துவாக இருக்கும் போதிலும் கிறித்துவத்தின் மீது அவருக்கு நம்பிக்கை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி பானுமதி அவருடைய பணியை 1988ம் ஆண்டு செஷன் நீதிபதியாக ஆரம்பித்தார். பிறகு ஏப்ரல் மாதம் 3ம் தேதி, 2003ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார். ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவருக்கு பதவி உதவி கிடைத்தது. உச்ச நீதிமன்றத்தின் ஆறாவது பெண் நீதிபதி அவர். அதே போன்று கொல்லீஜியத்தில் இடம் பெற்ற இரண்டாவது பெண் நீதிபதி ஆவார். அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் பானுமதியை “மிகச்சிறந்த நீதிபதி” என்று பாராட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் பார் அசோசியேசன் தலைவர் துஷ்யந்த் தேவ் பானுமதியை “மிகவும் சுதந்திரமான, பயமற்ற நீதிபதி, பல்வேறு முக்கியமான வழக்கின் தீர்ப்பில் மாறுபட்ட கருத்தினையும் பதிவு செய்தவர்” பாராட்டியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment