Justice Muralidhar : டெல்லியில் நடந்து வரும் கலவரங்கள் குறித்து, வெறுக்கத்தக்க உரைகளை நிகழ்த்திய பாஜக தலைவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாத டெல்லி காவல்துறையை விமர்சித்த, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 12 ஆம் தேதி கொலீஜியம் அளித்த பரிந்துரையை ஏற்று, நீதிபதி முரளிதர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி திடீர் மரணம்
சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய அரசியலமைப்பின் 222 வது பிரிவின் (1) வது பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதி மற்றும் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தனது அலுவல பொறுப்பை ஏற்கும்படி அவருக்கு அறிவுறுத்துவதில் மகிழ்ச்சி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான கொலீஜியம் அளித்த பரிந்துரையைப் பின்பற்றுகிறது. நீதிபதி முரளிதரின் இடமாற்றத்தை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் கொலீஜியத்தை "மறுபரிசீலனை செய்ய" வலியுறுத்தியது. அதோடு இதுபோன்ற இடமாற்றங்கள் "நீதி வழங்கல் அமைப்பில் பொதுவான வழக்குரைஞரின் நம்பிக்கையை அரிக்கவும் அகற்றவும் முனைகின்றன" எனவும் பார் அசோசியேஷன் குறிப்பிட்டிருந்தது.
Rasi Palan 27th February 2020: இன்றைய ராசிபலன்
வகுப்புவாத வன்முறை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் குறித்த தைரியமான தீர்ப்புகளுக்கு பெயர் பெற்ற நீதிபதி முரளிதர், 1987 ஆம் ஆண்டு நடந்த படுகொலைகளுக்கு உத்தரபிரதேச பிஏசியின் பணியாளர்களை தண்டித்த ஹஷிம்பூரா தீர்ப்பை வழங்கினார். 1984 சீக்கிய எதிர்ப்பு கலவரத்தில் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜ்குமாருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தார். இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் ஒரு பகுதியாக இருந்த நீதிபதி முரளிதர், அப்போதைய தலைமை நீதிபதி ஏ.பி ஷாவுடன் இணைந்து ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் முக்கிய தீர்ப்பையும் வழங்கினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.