Karnataka Floor Test Live News Updates: கர்நாடகா சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. எடியூரப்பா ஜெயிப்பாரா?
Karnataka Floor Test Live Updates: கர்நாடகா சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (மே 19) மாலை 4 மணிக்கு பெங்களூருவில் நடக்கிறது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக ஜெயித்த பாரதிய ஜனதாக் கட்சியின் முதல்வர் வேட்பாளரான பி.எஸ்.எடியூரப்பா நேற்று முன் தினம் முதல்வராக பதவியேற்றார்.
பி.எஸ்.எடியூரப்பாவுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற கர்நாடகா ஆளுனர் வாஜூபாய் வாலா 15 நாட்கள் அவகாசம் அளித்தார். ஆனால் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியதை தொடர்ந்து ஒரே நாள் அவகாசத்தில், மே 19 (இன்று) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ.வான கே.ஜி.போப்பையாவை ஆளுனர் நியமித்தார். அவர்தான் இன்று அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் பதவிப் பிரமாணத்தையும், மாலையில் நம்பிக்கை வாக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.
ஆனால் போப்பையா நியமனத்தையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது காங்கிரஸ், மஜத கட்சிகள். அந்த விசாரணை காலை 10.30 மணிக்கு பட்டியல் இடப்பட்டிருக்கிறது. கர்நாடகா இடைக்கால சபாநாயகர் போப்பையாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி : வாக்கெடுப்பை நேரடி ஒளிபரப்பு செய்யவும் உத்தரவு
எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான நிகழ்வுகளை தெரிந்துக் கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் இணைந்திருங்கள்.
Karnataka Floor Test Live News Updates: கர்நாடகா சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு Live Updates:
மாலை 4.20 : கர்நாடகா ஆளுனர் வாஜூபாய் வாலாவை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினார் எடியூரப்பா!
மாலை 4.10 : எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு கர்நாடக சட்டப் பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான டி.கே.சிவகுமார், மஜத.வின் குமாரசாமி மற்றும் எம்எல்ஏ.க்கள் தங்கள் வெற்றியை கொண்டாடினர்.
Bengaluru: Congress' DK Shivkumar, JD(S)'s HD Kumaraswamy & other MLAs at Vidhana Soudha after resignation of BJP's BS Yeddyurappa as Chief Minister of Karnataka. pic.twitter.com/qdGu8zGXWK
— ANI (@ANI) 19 May 2018
மாலை 4.05 : ‘நான் பதவியை இழப்பதால் ஒன்றையும் இழக்கப் போவதில்லை, மக்களுக்காகவே என் வாழ்க்கை. கர்நாடக மக்கள் பாஜகவுக்கு சட்டப்பேரவையில் 104 இடங்களை தந்ததற்கு பதிலாக 113 இடங்களை தந்திருந்தால் கர்நாடகாவை சொர்க்க பூமியாக மாற்றியிருப்பேன்.’ -எடியூரப்பா
மாலை 4.05 : கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் எடியூரப்பா கண்ணீர் மல்க பேசினார்.
Democracy has finally won the battle against the unholy politics of intimidation, corruption and lies. Congratulations Karnataka! @INCKarnataka #CongressDefeatsBJP pic.twitter.com/uBjHXZ6xiu
— Congress (@INCIndia) 19 May 2018
மாலை 4.00 : கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். போதிய எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற முடியாத காரணத்தால் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மாலை 4.00 : ‘என் மாநில மக்களுக்காக உழைக்க நான் விரும்புகிறேன். என்னுடைய இறுதி மூச்சு உள்ளவரை விவசாயிகளுக்கு சேவை செய்வேன்’- எடியூரப்பா
மாலை 4.00 : ‘கர்நாடக மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். நீதி வேண்டுமென்றே நினைக்கின்றனர். மதிப்பு, மரியாதையுடன் வாழ நினைக்கின்றனர். மக்களின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும், மஜதவும் ஒன்று சேர்ந்துள்ளன. உயிர் இருக்கும் வரை கர்நாடக மாநில மக்களுக்காக நான் போராடுவேன்.’ - எடியூரப்பா
மாலை 4.00 : ‘கர்நாடகாவில் 3,750 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகள் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. மக்களின் நன்மதிப்பை பெற்றது எங்கள் ஆட்சி, கடந்த 5 ஆண்டுகால காங். ஆட்சி மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்தது’ - எடியூரப்பா
மாலை 3.55 : ‘காங்.-மஜத கட்சிகள் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதே மக்களின் விருப்பம். 104 எம்.எல்.ஏக்கள் என்னை ஆதரிக்கின்றனர். மக்களின் தீர்ப்புக்கு எதிராக காங்.-மஜத கட்சிகள் கைகோர்த்துள்ளன. இந்த 2 கட்சிகளுக்கும் மக்கள் சந்தர்ப்பம் வழங்கவில்லை. இவர்கள் சுயநலத்திற்காக ஒன்று கூடி ஆட்சியமைக்கின்றனர்’ - எடியூரப்பா
மாலை 3.50 : எடியூரப்பா உரை - ‘பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என்னை கர்நாடக முதல்வர் வேட்பாளராக அம்பேத்கர் பிறந்த நாளன்று அறிவித்தார்கள். தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் எனக்களித்த ஆதரவை நான் மறக்க மாட்டேன். கர்நாடகா முழுக்க சுற்றி மக்களின் பிரச்னைகளை தெரிந்து கொண்டுள்ளேன்.’
மாலை 3.45 : கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வு தொடங்கியது. முதல்வர் எடியூரப்பா பேசி வருகிறார்.
மாலை 3.40 : கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, பாஜகவை சேர்ந்த ஷோபா, அனந்த குமார் ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்தனர்.
மாலை 3.30 : உணவு இடைவேளைக்கு பிறகு கர்நாடகா சட்டசபை மீண்டும் கூடியது. காலையில் பதவி ஏற்காதவர்கள், பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். தொடர்ந்து 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.
#WATCH Live from inside Karnataka's Vidhana Soudha #FloorTest https://t.co/wIRD9ejeZB
— ANI (@ANI) 19 May 2018
மாலை 3.15 : கர்நாடக தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில் மத்திய அமைச்சர் அனந்தகுமாருடன் முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இடைக்கால சபாநாயகர் போப்பையாவையும் எடியூரப்பா சந்தித்தார். அடுத்து ஆளுனரை அவர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
#WATCH Congress MLA Anand Singh who was said to be missing, sits with Congress's DK Shivakumar in the assembly. #floortest pic.twitter.com/0INIdju2fs
— ANI (@ANI) 19 May 2018
மாலை 3.10 : காணாமல் போனதாக கூறப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதாப் கவுடா போலீஸ் பாதுகாப்புடன் கர்நாடக சட்டப் பேரவைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு உணவு வழங்கப்பட்டது.
மாலை 3.00 : எடியூரப்பா ராஜினாமா செய்யத் தயாராகிவிட்டதாகவும், அது தொடர்பாக சட்டமன்றத்தில் வாசிக்க 13 பக்க அறிக்கையை அவர் தயார் செய்து வைத்திருப்பதாகவும் வெளியான தகவலை பாஜக இதுவரை மறுக்கவில்லை.
பகல் 2.30 : காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பி.சி.பட்டீலுடன், பாஜக எம்.எல்.ஏ. ஸ்ரீராமுலு பேசியதாக மற்றொரு ஆடியோவையும் பாஜக வெளியிட்டது. ‘எங்களது சபாநாயகரை நாங்கள் தேர்வு செய்துவிட்டோம். தேர்தலைப் பற்றி கவலைப்பட வேண்டாம். பதவி நீக்கம் எதுவும் நடக்காது’ என அந்த ஆடியோவில் பி.சி.பட்டீலுக்கு வாக்குறுதி கொடுக்கப்படுகிறது.
பகல் 2.10 : காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பி.சி.பட்டீல் என்பவருடன் எடியூரப்பா தொடர்புகொண்டு பேரம் பேசியதாக காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், பி.சி.பட்டீல் கொச்சிக்கு செல்ல பஸ்ஸில் இருப்பதாகவும், தன்னுடன் மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
Congress released an Audio clip where BJP leader Janaradhana Reddy is trying to lure Congress MLA from Raichur Rural by offering money and posts.
Janaradhana Reddy clearly says he has the backing of BJP President Amit Shah for doing horse trading! pic.twitter.com/oVEC88DgV2
— Karnataka Congress (@INCKarnataka) 18 May 2018
எடியூரப்பாவின் குரலாக அதில், ‘கொச்சிக்கு போகவேண்டாம். உங்களை அமைச்சர் ஆக்குகிறேன். உங்களுடன் இருப்பவர்களையும் அழைத்து வாருங்கள்.’ என வாக்குறுதி அளிக்கப்படுகிறது. 5 நிமிடங்களில் மீண்டும் தொடர்பு கொள்வதாக கூறிவிட்டு போனை வைக்கிறார் பி.சி.பட்டீல்.
"I'll arrange a meeting with the National President. You'll become a minister. You'll make 100 times the wealth you made so far"
BJP's Janardhana Reddy's offer to Congress MLA exposes the depths to which the BJP can sink for power. "Na khaunga, na khane dunga", @narendramodi?! pic.twitter.com/Ev3O8SBOEE— Congress (@INCIndia) 18 May 2018
ஏற்கனவே பாஜக தலைவர் ஜனார்த்தன் ரெட்டி பேரம் பேசியதாக ஆடியோ வெளியான நிலையில், எடியூரப்பாவே நேரடியாக பேரம் பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"Don’t go to Kochi, come back. We’ll make you a Minister and help you in whatever way you want."
This audio recording of @BSYBJP trying to lure Congress MLA goes on to prove, that Yeddyurappa is working hard to live up to his reputation of being corrupt and devoid of ethics. pic.twitter.com/HSvh2chnlC— Congress (@INCIndia) 19 May 2018
பிற்பகல் 2.00 : கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக கன்னட ஊடகங்கள் தகவல் வெளியிடுகின்றன. பெரும்பான்மையை நிரூபிக்க போதிய எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லை என்பதால் ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
பகல் 1.45 : காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 2 பேர் பெங்களூரு கோல்டு ஃபிஞ்சு ஹோட்டலில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானதையடுத்து அந்த ஹோட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிஜிபி அங்கு நேரில் செல்வதை தவிர்த்தார்.
பகல் 1.30 : உணவு இடைவேளைக்காக கர்நாடக சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் சபை கூடும். இதுவரை 210 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்.
பகல் 1.00: கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ சோமசேகர் பிடியில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹோட்டலில் இருப்பதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தாஜ் ஃபிஞ்சு ஹோட்டலுக்கு டிஜிபி தலைமையில் போலீஸார் விரைந்தனர்.
,
JD(S) MLAs HD Kumaraswamy & HD Revanna inside Vidhana Soudha in #Bengaluru. pic.twitter.com/WBvD0PechF
— ANI (@ANI) May 19, 2018
பகல் 12.30: கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. சோமசேகர் ரெட்டி பதவியேற்கவில்லை
பகல் 12.05 : நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பங்கேற்க கட்சி கொறடா உத்தரவு
பகல் 12.00 : கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏவாக பதவியேற்ற ஸ்ரீராமலு, எடியூரப்பா மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.
,
After winning assembly elections, B Sriramulu & BS Yeddyurappa have resigned from Lok Sabha, their resignations have been accepted by the Speaker. (file pics) #Karnataka pic.twitter.com/085VcK6jwv
— ANI (@ANI) May 19, 2018
காலை 11.40: காங்கிரஸ் எம்.எல். ஏக்கள் அனந்த் சிங், பிரதாப் கவுடா பதவியேற்க பேரவைக்கு வரவில்லை. மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக் கொள்வதும் சந்தேகம்.
காலை 11.30: பதவியேற்பில் 2 காங்கிரஸ் எம். எல். ஏக்கள் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
காலை 11. 15: கர்நாடக சட்டப்பேரவையில் முதல் நபராக எம்.எல்.ஏவாக பதவியேற்றார் எடியூரப்பா. அவரைத்தொடர்ந்து சித்தராமையாவும் எம்.எம்.ஏவாக பதவியேற்றார்.
,
CM BS Yeddyurappa & Siddaramaiah take oath as MLAs at Vidhana Soudha. #Karnataka pic.twitter.com/WpqdEuT5OW
— ANI (@ANI) May 19, 2018
காலை 11.00: சட்டமன்ற நிகழ்வுகளை 11 மணி முதல் நேரலையில் ஒளிபரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு. நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிபரப்பு செய்வதே சரியான தீர்வாக இருக்கும் என்றும் உத்த நீதிமன்றம் கருத்து. இடைக்கால சபாநாயகராக போப்பையா நியமனம் செய்யப்பட்டதையும் உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.
காலை 10.30 : காலை 11 மணிக்கு சட்டமன்றம் கூடுகிறது. எம்.எல்.ஏ.க்களுக்கு இடைக்கால சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியாக பதவிப் பிரமாணம் எடுப்பதாக இருந்தால், இந்த நிகழ்வே மாலை 3 மணி வரை தொடரும். மொத்தமாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டால், குறைந்த நேரத்தில் பதவியேற்பு நிகழ்வு நிறைவு பெறும்.
எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மாலை 4 மணிக்கு நடைபெறும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.