Karnataka former minister DK Shivakumar detained by ED : நேற்று (03.09.2019) கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை கைது செய்தது அமலாகக்துறை. அதனைத் தொடர்ந்து கர்நாடக அரசியல் சூழல் மிகவும் பதட்டமான நிலையை எட்டியுள்ளது. அமலாக்கதுறையின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
மேலும் படிக்க : சட்ட விரோத பண பரிவர்த்தனை : கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது
Karnataka former minister DK Shivakumar detained by ED : பண மோசடி வழக்கு
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார். 2017ம் ஆண்டு சித்தராமையா ஆட்சியில் முக்கிய அமைச்சராக பணியாற்றிய அவருடைய டெல்லி வீடு மற்றும் கர்நாடக வீடுகள் உட்பட 84 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டனர். அந்த சோதனை முடிவில் அவருடைய வீட்டில் இருந்து 8.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் ஹவாலா பணம் என்று அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தனர்.
நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என 2017ம் ஆண்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து டி.கே.சிவக்குமார் தொடர்ந்த வழக்கை ராஜினாமா செய்டதது கர்நாடக உயர் நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (30/08/2019) முதல் அவர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 5 நாட்களுக்குப் பிறகு அவரை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை.
மேலும் படிக்க : டி.கே சிவகுமாருக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன் -முதல்வர் எடியூரப்பா
வலுக்கும் எதிர்ப்புகள்
கைது செய்யப்படுவதற்கு முன்பே, உங்களின் இலக்கை சரியாக அடைந்துள்ளீர்கள் என்னுடைய பாஜக நண்பர்களே என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார் டி.கே.சிவக்குமார். பாஜகவின் எதிர்ப்பு அரசியலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன் நான். வருமான வரித்துறை மற்றும் அமலாக்கதுறையினரை அரசியல் ரீதியாக பயன்படுத்தி என்னை கைது செய்துள்ளனர் என்றும் அந்த ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய மற்றொரு ட்வீட்டில் என்னுடைய கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் இந்த நடவடிக்கையால் மனமுடைந்துவிடாதீர்கள். நான் எதையும் சட்டத்திற்கு புறம்பாக செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
I appeal to my party cadre, supporters and well-wishers to not be disheartened as I have done nothing illegal.
I have full faith in God & in our country's Judiciary and am very confident that I will emerge victorious both legally and politically against this vendetta politics.
— DK Shivakumar (@DKShivakumar) September 3, 2019
முன்னாள் முதல்வர் குமாரசாமி
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஒரு நாள் கூட இடைவெளியில்லாமல், திருவிழா நாட்களின் போதும் டி.கே.சிவக்குமாரிடம் விசாரணை நடைபெற்றது. ஆனால் தற்போது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஆளும் கட்சியினர், விசாரணை அமைப்புகளை வைத்து, எதிர்கட்சியினரை ஒடுக்க முயற்சி செய்கின்றனர் என்று கூறியுள்ளார்.
After days of interrogation, without allowing even a day's break for the festival, ED now cites non-cooperation to arrest @DKShivakumar. The ruling govt is using investigation agencies to oppress those opposition leaders who they think are a threat to their interests.
— H D Kumaraswamy (@hd_kumaraswamy) September 3, 2019
காங்கிரஸ் அறிக்கை
அரசியல் ரீதியான பழிவாங்கல் முறை இது என சிவக்குமார் கைதுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை சமர்பித்துள்ளது.
Statement by General Secretary, AICC, Shri @kcvenugopalmp on the politically motivated arrest of Shri @DKShivakumar pic.twitter.com/bbcPJO1Cc0
— Congress (@INCIndia) September 4, 2019
மல்லிகார்ஜூன கார்கே
காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மல்லிகார்ஜூன கார்கே ஏ.என்.ஐக்கு அளித்த பேட்டியின் போது, சிவக்குமாரை அவமானப்படுத்தும் முயற்சியாகவே இந்த கைது நடவடிக்கை இருக்கிறது. வருமானவரித்துறையினர் மற்றும் அமலாக்கதுறையினர் விசாரணைக்கு அழைத்த போதேல்லாம் மறுப்பு கூறாமல் விசாரணைக்கு ஒத்துழைத்தார். அவர் எங்கும் ஓடிப்போகவில்லை. இந்த கைதுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன் என மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
Mallikarjun Kharge on arrest of #DKShivakumar: They want to demoralise him & party workers. As per rules whenever Income Tax dept & ED called, he responded. He is cooperating. Is he absconding? Why are they doing this? Just to harass and mentally torture him. I condemn this. pic.twitter.com/2qr4gl3Cyw
— ANI (@ANI) September 4, 2019
பதட்டமான சூழலில் கர்நாடகா
கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மைசூர் - பெங்களூர் சாலையில் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Karnataka: Congress leaders and workers stage a protest in Bengaluru against the arrest of party leader #DKShivakumar yesterday. Karnataka Congress has called a statewide protest today against the arrest. pic.twitter.com/zQ566CzZad
— ANI (@ANI) September 4, 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.