Liz Mathew
B S Yediyurappa : பாஜகவில் ஒரு தலைமுறைக்கான மாற்றம் மத்திய அமைச்சரவையில் அடையாளம் காணப்பட்ட சில வாரங்களில், பாஜகவால் கர்நாடகாவில் ஒரு மாற்றத்தை ஏற்பட முடிந்துள்ளது. கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து பி.எஸ். எடியூரப்பா விலகிய நிலையில், அடுத்த அந்த பதவிக்கு யார் வருவார் என்ற கேள்விக்கான பதிலை திறந்து வைத்துள்ளார்.
2012ம் ஆண்டின் போது, லிங்காயத்து தலைவர் கட்சியில் இருந்து வெளியேறியதோடு, பாஜகவிற்கு மாநிலத்தில் செல்வாக்கை குழைத்துவிட்டார். எனவே தற்போது, 2023ம் ஆண்டு தேர்தலின் போது கட்சியை வழிநடத்தும் ஒரு வேட்பாளரை தேடுவதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறது பாஜக. 78 வயதான மூத்தவரின் ஆசீர்வாதங்களால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்பதை பாஜகவினர் அறிந்துள்ளனர்.
அடுத்த தலைவரை தேர்வு செய்யும் போது, பாஜக, எடியூரப்பாவின் விருப்பங்களை கருத்தில் கொள்ளும் என்று கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். . புதிய தலைவரின் தேர்தலை மேற்பார்வையிட கட்சியின் மைய பார்வையாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இருப்பார்.
அடுத்த தலைவரை தேர்வு செய்யும் போது அனைவரின் மனநிலையையும், கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வாரம் புதிய தலைவரை தேர்வு செய்ய உள்ள நிலையில், கட்சி ஒரு பார்வையாளரை அனுப்பும். மத்திய மற்றும் மாநில மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும் என்று மூத்த பாஜக தலைவர் கூறினார். புதிய முதல்வர் லிங்காயத்து பிரிவை சேர்ந்தவராக இருக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பிய போது, தலைவர்கள் தங்களின் மாறுபட்ட கருத்தினை தெரிவித்தார்கள்.
தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பு, தன்னுடைய மகன் விஜயேந்திராவை பதவியில் தக்க வைக்க பி.எஸ்.எடியூரப்பா விருப்பம் தெரிவித்துள்ளார். லிங்காயத்து தலைமையை தன்னுடைய குடும்பத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். எனவே லிங்காயத்து அல்லாத ஒரு தலைவரை தேர்வு செய்யலாம் என்று ஒரு தலைவர் கூறினார்.
ஆனால் மிகவும் எச்சரிக்கையுடன் கட்சி தங்களின் முடிவை மேற்கொள்ள உள்ளது. கட்சியின் ஆதரவு தளத்தின் மிக முக்கிய அங்கமாக விளங்கும் லிங்காயத்துகளின் மனம் வருந்தும்படி நடந்து கொள்ள விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.
2012ம் ஆண்டு, பாஜகவில் இருந்து வெளியேறிய எடியூரப்பா கர்நாடகா ஜனதா பக்ஷாவை உருவாக்கினார். அது பாஜகவை 2013ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளியது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா; அடுத்த முதல்வரை பாஜக தலைமை முடிவு செய்யும் என தகவல்
தகுதி வாய்ந்த பல தலைவர்களின் பெயர்கள் முதல்வர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எடியூரப்பாவின் அமைச்சரவையில் இடம் பெற்ற சுரங்கத்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது. அவர் ஒரு லிங்காயத்து தலைவர் ஆவார். அதே நேரத்தில், டெல்லியில், கட்சியில் சலசலப்பை ஏற்படுத்திய பெயர் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ப்ரல்ஹாத் ஜோஷி. அவர் லிங்காயத்து தலைவர் இல்லை. இருப்பினும் இவருக்கு எடியூரப்பா எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வயது முதிர்ச்சியடைந்த போதிலும், நரேந்திர மோடி-அமித் ஷா சகாப்தத்திற்கு முன்பு தேசிய அளவில் தலைவராக வளர்ந்தவர் எடியூரப்பா. கட்சி அவருக்காக 75 வயது வரம்பை ஒதுக்கி வைத்தது. முதல்வர் பொறுப்பில் இருந்து அவர் விலகினாலும் கூட,கட்சியால் புறக்கணிக்கக்கூடிய ஒருவர் அல்ல என்று, கர்நாடக அரசியலை உற்று கவனிக்கும் ஒரு பாஜக தலைவர் கூறினார்.
2011ம் ஆண்டு சட்டத்திற்கு புறம்பாக சுரங்க வேலைகளில் ஈடுபட்ட வழக்கில் எடியூரப்பாவின் பெயர் அடிபட்ட நிலையில், பாஜக அவரை பதவியில் இருந்து விலக் கூறியது. ஆனால் தற்போது அது போல் இல்லாமல், பாஜக மத்திய தலைமை எடியூரப்பாவுக்கு எதிராக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதே போன்று அவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக அறிவித்த போது, மத்தியில் இருந்து எந்த ஒரு தலைவரையும் அனுப்பவில்லை. உண்மையில், கர்நாடகாவின் பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகிய இருவரும் எடியூரப்பா பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாக கூறினார்.
உண்மையில், பாஜக தலைவர்கள் முதல்வர்களாக நீடிக்க ஹிந்துத்துவ கொள்கைகளையும், மோடியின் அலையில் இருக்கவும் வேண்டியதில்லை. தெற்கு மாநிலமான கர்நாடகாவில் பாஜகவின் வெற்றிக்கு எடியூரப்பா ஒரு முக்கிய காரணமாக இருந்தார். உண்மையில் , மாநிலங்களில் பாஜகவின் அதிர்ஷ்டம் கட்சியில் எடியூரப்பாவின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை நெருக்கமாக பிரதிபலிக்கிறது.
மற்ற தலைவர்கள் போல் எடியூரப்பா இந்துத்துவ கொள்கைகளை அதிகம் கடைபிடிப்பவர் இல்லை. முதலில் அவர் ஒரு விவசாயிகளின் தலைவர், அவர் தனது ஆதரவு தளத்தை பாஜகவின் கலாச்சார மற்றும் தேசியவாத நெறிமுறைகளுடன் இணைத்துக்கொண்டார். ஜனதா தளம் மற்றும் காங்கிரஸின் அரசியலில் எழுச்சிக்கு மத்தியில் அவருக்கு கீழ் பாஜக கர்நாடகாவில் நிலையான வளர்ச்சியைக் கண்டது. பாஜகவை நகரத்தில் இருந்து கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர் எடியூரப்பா என்று மூத்த பாஜக தலைவர் முரளிதர் ராவ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
இரண்டு வருடங்களில் மாநில சட்டமன்ற தேர்தல் வருகின்ற நிலையில், புதிய தலைவரை கொண்டு வர எடுக்கப்படும் முடிவு நல்ல அரசியல் நகர்வு என்று மூத்த தலைவர் ஒருவர் கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கட்சியை மற்றொரு தேர்தலுக்கு அவரால் நகர்த்தி செல்ல இயலாது. நான்கு ஆண்டுகள் முதல்வராக எடியூரப்பா இருந்த பிறகு, புது முகத்துடன் தேர்தலுக்கு செல்ல முடியாது. இது மாற்றத்திற்கான தருணம் என்றும் மூத்த பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.
மாநிலத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள், குறிப்பாக எடியூரப்பாவை அகற்றுவதற்கு எதிராக லிங்காயத் தலைவர்கள் நடத்திய போராட்டங்கள், பாஜக தலைமையுடன் சரியாகப் போகவில்லை. எடியூரப்பா தனது எதிர்ப்பாளர்களிடம் முறையிட்ட போதிலும், மத்திய தலைமையின் ஒரு பகுதியினர் எதிர்ப்புக்கள் மேடையில் நிர்வகிக்கப்பட்டதாக இருந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.