கர்நாடகாவில் பேருந்துகள் இயக்கம் : தமிழகம் உள்ளிட்ட 4 மாநில மக்களுக்கு நோ- எண்ட்ரி

இத்தனை தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கூட இரவு ஏழு மணியில் இருந்து காலை 7 மணி வரைக்கான ஊரடங்கில் எந்த மாற்றமும் இல்லை.

karnataka lockdown 4.0 : state banned entry to the people from Kerala, Tamil Nadu, Gujarat, Maharashtra  :  கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு இன்று அதிகாலையில் இருந்து  துவங்கியுள்ளது.  முன்பு போல் அதிக அளவு தடைகள் ஏதும் இல்லாமல், சில தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீட்டின் படி, மாநில போக்குவரத்து தொடர்பாக அந்தந்த மாநிலங்களே முடிவுகளை மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் கேரளா மற்றும் கர்நாடகாவில் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கர்நாடகாவில் சிவப்பு மண்டலம் மற்றும் தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளை  தவிர அனைத்து பகுதிகளிலும் அம்மாநில போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகம், கேரளா, குஜராத் மற்றும் மகாராஷ்ட்ராவில் இருந்து கர்நாடகாவுக்குள் யாருக்கும் அனுமதி இல்லை.  இந்நிலை மே 31 வரை தொடரும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : கொரோனாவுக்கு புகையிலையில் மருந்து? தடுப்பூசி ”ரெடி” என அறிவித்த சிகரெட் நிறுவனம்

கர்நாடகாவில் உள்ள அனைத்து கடைகளும் இன்று திறக்கப்பட்டன. அதே போன்று மாநிலத்திற்குள் இயக்கப்படும் ரயில்களும் இன்று முதல் இயக்கப்பட உள்ளது. டாக்ஸி, ஆட்டோ மற்றும் கேப்களில் 2 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. சலூன்களும் ஸ்பாக்களும் வழக்கம் போல் வேகம் பெற துவங்கியுள்ளது. இருப்பினும் மால்கள் மற்றும் ஷாப்பிங்க் காப்ம்ளெக்ஸ்கள் மூடப்பட்டே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கூட இரவு ஏழு மணியில் இருந்து காலை 7 மணி வரைக்கான ஊரடங்கில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : பேருந்து போக்குவரத்துக்கு என்னென்ன பாதுகாப்பு நெறிமுறைகள் : உயர்நீதிமன்றம் உத்தரவு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close