Advertisment

கொரோனாவுக்கு புகையிலையில் மருந்து? தடுப்பூசி ”ரெடி” என அறிவித்த சிகரெட் நிறுவனம்

மனித உடலில் இந்த தடுப்பூசியை செலுத்தினால், மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை இது தூண்டிவிடும் என அந்நிறுவனம் அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
England based cigarette company BAT claims that it discovered covid19 vaccine from Tobacco

England based cigarette company BAT claims that it discovered covid19 vaccine from Tobacco

England based cigarette company BAT claims that it discovered covid19 vaccine from Tobacco : உலகை உலுக்கும் கொரோனா வைரஸில் இருந்து மனித இனத்தை பாதுகாக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. முன்னணி நாடுகள் பலவும் ஒன்றிணைந்தும் தனித்தனியாகவும் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது கொரோனா வைரஸிற்கு லண்டனில் உள்ள புகையிலை நிறுவனம் ஒன்று தடுப்பு மருந்தை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisment

மேலும் படிக்க : கொரோனா தடுப்பூசி : முக்கிய மைல் கல்லை எட்டிய ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம்

பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ, உலகின் முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். புகையிலையில் இருக்கும் புரதத்தில் இருந்து கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மருந்து தயாரித்து உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் பரிசோதனை முடிவுகள் நம்பிக்கையை தரும் வகையில் அமைந்துள்ளது என்று கூறும் அந்த நிறுவனம், மனித உடலில் இந்த தடுப்பூசியை செலுத்தினால், மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை இது தூண்டிவிடும் என்று கூறியுள்ளது.

மேலும் படிக்க : முகக்கவசம் அணி… இல்லை, ரூ. 12 லட்சம் அபராதம் செலுத்து – குவைத் அரசு அதிரடி

அமெரிக்காவின் ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேசனின் (Food and Drug Administration) அனுமதியை பெற்றால், இதனை மனிதர்களிடம் செலுத்தி ஆராய்ச்சியில் அடுத்த கட்ட நிலையை எட்ட முடியும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, இத்தாலி, இஸ்ரேல், இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள் தற்போது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மிகவும் தீவிரமாக இயங்கி வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Vaccine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment