முகக்கவசம் அணி... இல்லை, ரூ. 12 லட்சம் அபராதம் செலுத்து - குவைத் அரசு அதிரடி

வளைகுடா நாடுகளான குவைத், கத்தாரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

Kuwait government order: three months of jail if citizens do not wear masks  : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. நோயின் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பெரும் முயற்சிகள் எடுத்து வந்தும் கூட உலகில் 48 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகத்தில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது.  வளைகுடா நாடுகளான குவைத், கத்தாரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க : தன் கடைசி உடமையை விற்றும் கூட இவர்களுக்கு உதவுவேன் – சோனு சூட் உருக்கம்

குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று கூறியுள்ளது. பொதுமக்கள், பொது இடங்களுக்கு வரும் போது கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் முக கவசம் அணியாமல் பொது வெளியில் திரியும் நபர்களுக்கு வழங்க இருக்கும் தண்டனைகள் குறித்தும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கில் தளர்வுகள் அமல் : எந்த அடிப்படையில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன?

அதன்படி குவைத் நாட்டில், பொது இடங்களில் முகக்கவசங்கள் அணியாமல் வரும் நபருக்கு மூன்று மாத சிறை தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இல்லையென்றால் 5 ஆயிரம் தினார் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு 12 லட்சம் ரூபாய் ஆகும். இதற்கு பிறகேனும், பொதுமக்கள் முக கவசம் அணிவதை தீவிரமாக பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று கத்தார் நாட்டிலும் முக கவசங்கள் அணியாதவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close