Karnataka medical seat scam : கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் ஏற்கனவே அமலாக்கத்துறையின் விசாரணையில் இருக்கின்ற நிலையில் தற்போது மீண்டும் இரண்டு நபர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர கங்காதரையா ஆவார். அவருடைய சொந்த ஊரான துமகுருவில் சித்தார்த்தா என்ற பெயரில் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ சித்தார்த்தா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மற்றும் ரிசர்ஜ் செண்டர், ஸ்ரீ தேவராஜ் ஊர்ஸ் அகெடாமி ஆஃப் ஹையர் எஜூக்கேசன் அண்ட் ரிசர்ச் ஆகிய கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் அவர்.
Advertisment
Karnataka medical seat scam - ஐ.டி.ரெய்டு
நீட் தேர்வு மூலமாகவே மருத்துக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கின்ற நேரத்தில் பல மாணவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு முன்பே மெடிக்கல் சீட்டினை புக் செய்து கொள்வதாகவும், அதற்காக கோடிக் கணக்கில் டொனேசன் பெறப்படுவதாகவும், ட்ரெஸ்ட்டுகளில் அந்த கறுப்பு பணம் முதலீடு செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரினைத் தொடர்ந்து பெங்களூரில் இருக்கும் பரமேஸ்வரா இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமாக துமகுருவில் இருக்கும் கல்லூரிகள் உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர்ர சோதனையில் ஈடுபட்டனர்.
Advertisment
Advertisements
காங்கிரஸின் மற்றொரு உறுப்பினரான ஆர்.எல்.ஜலப்பா அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பல்வேறு முக்கிய தகவல்கள் ஐ.டி. அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. மேலும் 300 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 60 மணி நேர தொடர் சோதனையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் கணக்கில் வராத சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த வழக்கினை அமலாக்கத்துறையினர் விசாரிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல் மற்றும் பொதுமருத்துவம் படிக்க இந்திய மெடிக்கல் கவுன்சில் நடத்தும் நீட் தேர்வுகள் எழுதுவது கட்டாயமாகும். சில மாணவ மாணவிகள் அரசுப் பள்ளிகளில் படித்து வெளியேறும் போது நீட் அவர்களுக்கு பெரும் பயத்தினை உருவாக்கும் ஒன்றாக இருக்கிறது. சிலருக்கோ நீட் தேர்வு பயிற்சிகளுக்கு தேவையான நிதி இல்லாமல் மருத்துவ கனவுகளை தொலைத்தவர்களும் கூட உண்டு. சமூகத்தில் உயர்ந்த இடங்களில் இருப்பவர்களுக்கு நீட் மிகவும் எளிமையாக இருப்பது மட்டுமின்றி சிலருக்கு போலியாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைக்கவும் துணிச்சல் இருக்கிறது. தேனி மருத்துவக்கல்லூரியில் பயின்று வந்த உதித் சூரியா இதற்கு ஒரு முன்னுதாரணம். ஆள்மாறாட்ட வழக்குகளே அதிக அதிர்ச்சியை அளித்த நிலையில் நன்கொடையாக பணம் கொடுத்து மருத்துவ சீட்டுகளை வாங்கிக் கொள்வது வேறு ஒரு வகையில் அதிர்ச்சியை அளிக்கிறது.
இங்கு கல்வி நிறுவனங்களில் இவ்வாறு ஐ.டி. ரெய்டு நடக்கிறது என்றால், நாமக்கல் பகுதியில் நீட் கோச்சிங்கிற்கு என வடிவமைக்கப்பட்ட கட்டணத்தைவிட மிக அதிக அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து நாமக்கலின் கிரீன் பார்க் பள்ளியின் நீட் பயிற்சி மையங்களில் கடந்த நான்கு நாட்களாக சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.