காஷ்மீர் விவகாரம் : முக்கிய அதிகாரிகளிடம் மணிக்கணக்கில் ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர்!

Kashmir Curfew : நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எதிர்கட்சிகள் முடிவு

Kashmir clampdown: Amit Shah met higher officials
Kashmir clampdown: Amit Shah met higher officials

Kashmir clampdown: Amit Shah met higher officials : நேற்று நள்ளிரவு முதல் பதட்டமான சூழல் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் நிலவி வருகிறது. அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு ஸ்ரீநகர் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. செல்போன் நெட்வொர்க்குகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. ஆனால் ப்ராட்பேண்ட் சேவைகள் தொடருகின்றன. நிகழ்வுகள் இவ்வாறாக இருக்க, அமித் ஷா ஞாயிற்றுக் கிழமை காலை (04/08/2019) மிக முக்கியமான அதிகாரிகளை தன்னுடைய அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Kashmir clampdown: Amit Shah met higher officials

அமித் ஷா 04ம் தேதியன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் ராஜீவ் கௌப்பா, புலனாய்வுதுறை தலைமை அதிகாரி அரவிந்த் குமார் ஆகியோரை தன்னுடைய அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

11 மணிக்கு துவங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம். மதியம் 12.30 வரை நீடித்தது.  அதே நேரத்தில் நாகலாந்து மாநிலத்தின் கவர்னர் ஆர்.என்.ரவி உள்துறை அமைச்சகத்தில் இருந்து வெளியேறினார். அவர், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

மதியம் 2 மணியின் போது காஷ்மீரின் கூடுதல் செயலாளர் ஞானேஷ் குமார் அமித் ஷாவை சந்தித்து காஷ்மீரின் தற்போதையை நிலை என்ன என்பது குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.

மேலும் படிக்க : : ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு – வீட்டுக்காவலில் முப்தி, ஓமர் அப்துல்லா

நேற்று நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டம் முழுவதிலும், காஷ்மீரில் உள்ள சட்ட ஒழுங்கு நிலவரம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு குறித்ததாகவே இருந்தது. இந்திய அரசியல் சட்டம் 35ஏ மற்றும் 370-வை நீக்குவதற்கான கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.  காஷ்மீரில் என்ன நிலவி வருகிறது, எதற்காக இத்தனை படைகள் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்பது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.

எதிர்கட்சிகள் கண்டனம்

ஆர்ட்டிக்கிள் 53ஏ குறித்தும், ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரிப்பது குறித்து நிலவும் கருத்துகள் பற்றியும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்கும் போது “காஷ்மீரில் மத்திய அரசு என்ன நிகழ்த்தப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு பயத்தினை அளிக்கிறது. உள்துறை அமைச்சகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் செய்திகளாக தொகுத்து வழங்கும் செய்தியாளர்கள் தான் கூற வேண்டும், கடந்த 24 – 48 மணி நேரங்களில் உள்துறை அமைச்சகம் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை” என்று கூறினார்.

சி.பி.ஐ(மார்க்சிஸ்ட்) கட்சியும் தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளது. அரசியல் ஆதாயம் காரணமாக ஜம்மு – காஷ்மீரில் ஏதேனும் ஏற்பட்டால், அதன் விளைவை மொத்த நாடும் சந்திக்கும் என்றும், அம்மாநிலத்தில் என்னதான் நிகழ்கிறது என்பதை அரசு விளக்க வேண்டும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜம்மு-காஷ்மீர் தலைவர்களுக்கு துணை நிற்கும் காங்கிரஸ்!

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kashmir clampdown amit shah met higher officials will discuss the issue in cabinet

Next Story
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிர்வுகளை உருவாக்கிய பரபரப்பு நிகழ்வுகளின் தொகுப்புProminent faces detained in Kashmir
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com