கொரோனா பரவலை தடுக்க கழிவுநீர் ஆராய்ச்சி செய்யும் கேரள ஆராய்ச்சியாளர்

மாதிரிகள் பின்னர் ஒரு சிக்கலான மூன்று-நிலை பகுப்பாய்வு மூலம் ஆராயப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன

Vishnu Varma

Kerala-born scientist tests sewage in Sydney to map Covid spread  : ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட கழிவுநீர் மாதிரிகளை கவனமாக ஆராய்ந்து வரும் 20 பேர் கொண்ட குழுவினை இயக்கி வருகிறார் சுதி பய்யப்பத். இது மிகவும் கவனம் ஈர்க்கும் வேலை அல்ல. ஆனால் அவருடைய ஆராய்ச்சி முடிவுகளால் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பினை அளிக்கிறது.

சிட்னியில் குடியேறிய கேரளாவில் பிறந்த நுண்ணுயிரியலாளரான சுதி உருவாக்கிய ஒரு வழிமுறை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆஸ்திரேலியா முழுவதும் SARS-CoV-2 இன் பாதிப்புகளை கண்டுபிடிப்பதற்காக கழிவு நீரை பரிசோதனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது கழிவு வழியாக மூன்று நான்கு நாட்களுக்குள் வைரஸை ‘வெளியேற்றுவார்’ என்ற அடிப்படையில் அவரது வழிமுறை நிறுவப்பட்டுள்ளது. இருமல், தும்மும்போது அல்லது ஒருவரின் பற்களைத் துலக்கும்போது கூட இந்த வைரஸ் வெளியேற்றம் ஏற்படலாம். இத்தகைய வைரஸ் துண்டுகள், கழிப்பறைகள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் வழியாக பயணித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் முடிகிறது. ஆய்வகங்களில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், அறிகுறிகள் உள்ள ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பே ஒரு சமூகத்திற்குள் தொற்று இருப்பதைக் கண்டறிய உள்ளூர் சுகாதாரத் துறைகளுக்கு உதவும்.

“இந்த முறையின் உணர்திறன் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 20,000-30,000 மக்கள்தொகை கொண்ட ஒரு இடத்தில் ஒரு நபர் வைரஸைப் வெளியேற்றினால், அந்த வைரஸை சிகிச்சை நிலையத்தில் எடுக்க முடியும். இது ஒரு பெரிய பொருளாதார ஆற்றலைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது பலரைக் கண்காணிப்பதற்கு சமம். நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த இது உதவியது, ”என்கிறார் 50 வயதான சுதி. கடந்த 20 ஆண்டுகளாக அரசாங்கத்திற்கு சொந்தமான சட்டப்பூர்வ நிறுவனமான சிட்னி வாட்டரில் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வருகிறார்.

சோதனை மாதிரிகளில் தொற்றினை கண்டறிந்தால் நாங்கள் உடனே முடிவுகளை சுகாதாரத்துறைக்கு வழங்குகின்றோம். பின்னர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு மூலம் SARS-CoV-2 இருப்பதை உறுதி செய்தோம் என்று ஊடகங்கள் மூலமாக எச்சரிக்கை செய்வார்கள். அப்பகுதியில் இருக்கும் மக்கள் உடனே சிறிய அறிகுறிகள் தென்பட்டாலும் சோதனைக்கு செல்லுமாறு வற்புறுத்தப்படுவார்கள்.

கழிவுநீரை ஆராய்ச்சி செய்யும் போது இருக்கும் இருக்கும் மிகப்பெரிய நன்மை என்னவென்றால் நோய் தொற்றால் அறிகுறி வெளிப்படுவதற்கு முன்பே நோயால் அங்கு யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அதிகாரிகளால் கூறிவிட இயலும்.

உங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு, அறிகுறிகளை காட்ட 6 முதல் 7 நாட்களாகும். அல்லது நீங்கள் அறிகுறிகளை வெளிக்காட்டாமல் கடத்தவும் செய்யலாம். ஆனால் மூன்று நாட்களிலேயே நீங்கள் வைரஸை கழிவுகள் மூலம் வெளியேற்றுகிறீர்கள். எனவே நோய் பரவலை கட்டுப்படுத்த எங்களுக்கு அதிக நேரம் கிடைக்கிறது. ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் நோய் தொற்று இருந்தால், நோய் தொற்று அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க : 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி- முதல்வர் அறிவிப்பு

பய்யப்பத் கேரளாவின் திருச்சூருக்கு வருகை தந்த அதே சமயத்தில் தான் நாட்டின் முதல் கொரோனா தொற்று நோயாளியான மருத்துவ மாணவர் அங்கே சிகிச்சை பெற்று வந்தார். வுஹானில் இருந்து வந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிப்ரவரி மாதம் பய்யப்பத் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பிய போது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களில் 1% பேர் கொரோனா வைரஸை தங்களின் கழிவுகள் மூலம் கழிவுநீர் வாய்க்கால்களில் வெளியேற்றதை அறிந்தார். அப்போது தான் இது தொடர்பாக ஆராய வேண்டும் என்று உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக மூலக்கூறு உயிரியல் பிரிவில் ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார்.

“எங்களிடம் நீர் ஆராய்ச்சி ஆஸ்திரேலியா (WRA) என்று ஒரு அமைப்பு உள்ளது. இது கொரோனா வைரஸ் தொடர்பான கழிவுநீர் கண்காணிப்புக்கான ஒத்துழைப்பு Collaboration on Sewage Surveillance for SARS-CoV-2 (ColoSSoS) என்ற ஆராய்ச்சி திட்டத்தை உருவாக்கியது. நான் இதில் ஒரு பகுதியாக இருக்கிறேன். ஆரம்பகாலத்தில் வெற்றிகரமான கண்டறிதலைப் பெற்றபோது, ​​தகவல்களை மற்ற கூட்டாளர்களுக்கு அனுப்பினேன். அவர்கள் இப்போது நாடு முழுவதும் எனது முறையை பின்பற்றினர், ”என்றார் சுதி.

திட்டத்தின் ஆரம்ப முடிவுகள் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நம்பிக்கையைத் ஏற்படுத்தின. சிட்னியில் நோய் தொற்று அதிகரித்ததாக அறிவித்தது. நகரின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து மைனஸ் 80 டிகிரியில் சேமிக்கப்பட்ட நூறு ஒற்றைப்படை மாதிரிகள் மதிப்பீட்டை சரிபார்க்க பயன்படுத்தப்பட்டன. அந்த மாதிரிகளின் முடிவுகள் அந்த பகுதியில் உள்ள உண்மையான தொற்றுநோயியல் தரவுகளுடன் ஒப்பிடும்போது, ​​எத்தனை பேர் மருத்துவ ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான ஒரு வலுவான ஒற்றுமை இருந்தது.

மேலும் படிக்க : 5 லட்சம் அமெரிக்கர்களை பலி வாங்கிய கொரோனா; 3 பெரும் போர்களின் இழப்புக்கு சமம்!

கோவிட் -19 இன் மரபணு குறிப்பான்களை ஒரு மாதிரியிலிருந்து பிரித்தெடுப்பது நம்பமுடியாத அளவிற்கு சிக்கலானது மற்றும் மிகவும் தீவிரமான ஒன்றாகும், களத்தில் உள்ள பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சிறிய ஜாடிகளில், குளிரூட்டப்பட்ட நிலையில் பத்து டிகிரிக்கு மிகாமல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. மாதிரிகள் பின்னர் ஒரு சிக்கலான மூன்று-நிலை பகுப்பாய்வு மூலம் ஆராயப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன அவரது குழு ஒரு வாரத்தில் சுமார் 150 மாதிரிகளை சோதிக்கிறது.

மற்ற நாடுகளைப் போன்று ஆஸ்திரேலியாவில் வழக்குகள் அதிகமாக இல்லை என்றாலும் கூட கழிவுநீர் சேகரிப்பில் ஒரு சவாலை நாங்கள் எதிர்கொண்டோம். அது அளவுக்கு அதிகமாக “டைல்யூட்” ஆவது. வெளிப்படையாக, வைரஸ் அந்த வழியில் நீர்த்துப் போகும், எனவே மிகக் குறைந்த எண்ணிக்கையை எடுக்கும் ஒரு முக்கியமான முறையை நாம் கொண்டிருக்க வேண்டும். இரண்டாவது சவால் என்னவென்றால், கழிவுநீர் என்பதே ஒரு கடினமான சவால் தான். ஏன் என்றால் அதில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் ரசாயன கலவைகள் இருக்கலாம். இது வைரஸ் கண்டறிதலில் தலையீடாக அமைந்தது. இந்த தடுப்பான்கள் அனைத்தும் கொண்டு செல்லப்படாத வகையில் மாதிரியில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான வைரஸ்களிலிருந்து வைரஸ் நியூக்ளிக் அமிலத்தை பிரித்தெடுப்பது தந்திரமானது என்கிறார் சுதி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kerala born scientist tests sewage in sydney to map covid spread

Next Story
சுழல் விளக்கு கலாச்சாரத்துக்கு முடிவு… நாட்டில் உள்ள அனைவருமே ‘விஐபி-கள்’ தான்… வெங்கையா நாயுடு விளக்கம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com