scorecardresearch

இடுக்கி நிலச்சரிவு : கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் 18 குழந்தைகள் உயிருடன் இருந்திருப்பார்கள்!

உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு அணைகளுக்கு இழுத்து செல்லப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு என்று கூறுகின்றனர்.

Kerala landslide: 18 children dead, missing: ‘If no Covid, would be in school, alive’

 Vishnu Varma

Kerala landslide: 18 children dead, missing: ‘If no Covid, would be in school, alive’ : 12ம் தேதி அன்று 10 வயது மதிக்கத்தக்க நதியாவின் உடல் மீட்கப்பட்ட செய்தியை கேட்டு உறைந்துவிட்டார் ஆசிரியர் கோன்சிலால் மேரி. மூணாற்றில் அமைந்திருக்கும் லிட்டில் ஃப்ளவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தான் நதியா படித்துக் கொண்டிருந்தார். அவருடைய உடல் அங்கு ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றங்கரை ஓரமாக கண்டறியப்பட்டது.

என்னால் இதை நம்பவே இயலவில்லை. அவள் மிகவும் நல்ல குழந்தை. நன்றாக படிக்கவும் செய்வாள். அவளுடைய கையெழுத்து அத்தனை அழகானது. மார்ச் மாதத்தில் தான் நான் அவளை இறுதியாக சந்தித்தேன். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தன்னுடைய வீட்டிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். அவளுடைய அம்மா அவளை வந்து அழைத்துச் சென்றார். அன்று அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள் என்கிறார் கடந்த ஆண்டு நதியாவின் வகுப்பாசிரியராக பணியாற்றிய மேரி.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

நதியாவுடன் அதே பள்ளியை சேர்ந்த மேலும் மூன்று பெண் குழந்தைகள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி, கனமழைக்கு நடுவே பெரும் பாறைகள், கற்கள், சேரும் சகதியுமாய் பெட்டிமுடி பகுதியை மூட நிலச்சரிவு பெரும் விபத்தாய் உருபெற்றது. மூணாறு கிராம பஞ்சாயத்தின் கீழ் வரும் ராஜமலை வார்டின் கீழ் வரும் பெட்டிமுடியில் அமைந்திருந்த நான்கு வரிசையில் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்பும் மொத்தமாய் அழிந்தது. கண்ணன் தேவன் ஹில்ஸ் ப்ளான்டேசன் கம்பெனி ப்ரைவேட் லிமிட்டட் நிறுவனத்தில் பணியாற்றிய தோட்டத் தொழிலாளர்கள் அங்கே வாழ்ந்து வந்தனர்.

வெள்ளிக்கிழமை மதியம் வரை 56 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதில் 10 குழந்தைகளும் அடங்குவார்கள். 14 நபர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அதில் 8 நபர்கள் குழந்தைகள். பெட்டிமுடிக்கு மிகவும் அருகில் இருக்கும் பள்ளி என்றால் அது ராஜமலை பள்ளி தான். அரசு ஆரம்பப் பள்ளி. அங்கு 5ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால் பலரும் தங்களின் குழந்தைகளை மேல் வகுப்பிற்கு மூணார் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்க வைத்துள்ளனர். 20 கி.மீ பயணம் என்பது சாத்தியம் ஆகாது என்பதால் அவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். 16 குழந்தைகள் விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். மற்ற குழந்தைகள் தினமும் பள்ளிக்கு ஷேர் ஆட்டோவில் வந்து சென்றனர்.

மேலும் படிக்க : இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி? முக்கிய காரணங்கள் என்னென்ன?

சமர்க ஷிக்‌ஷா அபியான் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹெப்ஸி கிறிஸ்டினாள் இது குறித்து பேசிய போது, “இந்த நிகழ்வு குறித்து நான் வாட்ஸ் ஆப்பில் பார்த்தேன். அங்கு யாரும் குழந்தைகள் சிக்கியிருக்க கூடாது என்று நான் மனமார பிரார்த்தனை செய்தேன்”. கொரோனா மற்றும் அதன் பின்னால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக மாணவர்கள் தங்களின் விடுதிகலை காலி செய்துவிட்டு வீடுகளுக்கு சென்றனர். அவர்கள் அங்கே சென்று இருக்க கூடாது என்று நான் விரும்புகிறேன். கொரோனா ஊரடங்கு மற்றும் இல்லாதிருந்தால் தற்போது அந்த குழந்தைகள் எல்லாம் பள்ளியிலும் விடுதியிலும் உயிருடன் இருந்திருப்பார்கள்” என்று கூறினார்.

ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் கூட வீட்டுக்கு சென்றுவிட வேண்டும் என்று அந்த உள்ளங்கள் ஆசைப்படும். ஒவ்வொரு வார இறுதியிலும் சீக்கிரமாக தயாராகி, நல்ல ஆடைகளை உடுத்திக் கொண்டு அவர்களின் பெற்றோர்கள் வருகைக்காக காத்திருப்பார்கள். அவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் மூணாற்றில் இறங்கி நொறுக்கு தீனிகள் மற்றும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு செல்வார்கள். இந்த சின்ன சின்ன விசயங்கள் தான் அவர்களுக்கு அத்தனை சந்தோசத்தை தரும் ஒன்றாக இருக்கும் என்றார் மேரி. 82 நபர்கள் வாழ்ந்த அந்த பகுதியில் வெறும் 12 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலரும் டாட்டா ஹாஸ்பிட்டல் மற்றும் கொலெஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க : மூணாறு நிலச்சரிவு : உயிரிழந்தவர்கள் குடும்பத்தின் துயரத்தில் பங்கேற்கிறேன் – சூர்யா

அந்த குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள், அந்த குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர்களின் வாகனங்கள் மற்றும் இதர பொருட்கள் குப்பையாய் சகதியில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருக்கும் மண் பகுதிகளை பார்க்கும் போது கிட்டத்தட்ட 5 கி.மீ அப்பால் இருந்து அரித்து வந்துள்ளது என்பதை உணர முடியும். ஒரு வாரத்திற்கு பின்பு அந்த பகுதியை சுத்தம் செய்ய கனரக வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மீட்புக் குழுவினர் உடல்களை கண்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு அணைகளுக்கு இழுத்து செல்லப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு என்று கூறுகின்றனர்.

பெட்டிமுடிக்கு அருகே இருக்கும் மற்றொரு குடியிருப்பு பகுதியை சேர்ந்த வேல்முருகன் இது குறித்து கூறிய போது, “என்னால் டிவியை கூட ஆன் செய்ய இயலவில்லை. அவர்கள் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அன்பானவர்கள். அவர்களின் குழந்தைகளை நான் தினமும் பார்ப்பேன். அவர்கள் இந்த பக்கமும் அடிக்கடி வருவதுண்டு. மாமா, மாமா என்று அன்போடு அழைக்கும் குழந்தைகள். கனமழைக்கு நடுவிலும் அவர்களின் அபலகுரல்கள் கேட்டது. ஆனால் விடாத மழையால் என்னால் அவர்களுக்கு உதவ முடியவில்லை. அடுத்த நாள் காலையில் அவர்களின் நான்கு குடியிருப்பு பகுதிகளும் அடித்து செல்லப்பட்டிருந்தது.  நதியாவுடன் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த தன் மகள் ஹேமாவின் நிலை குறித்து கூறும் போது, காலையில் இருந்து இரவு வரை அழுது கொண்டே இருக்கிறாள். அவளால் நிம்மதியாக தூங்கவும் இயலவில்லை. இந்த வலி என்றும் போகாது என்கிறார் வேல்முருகன்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Kerala landslide 18 children dead missing if no covid would be in school alive