Kerala Rains : கேரளா மாநிலம் 2013ம் ஆண்டிற்கு பிறகு மிகவும் பலம் வாய்ந்த தென்மேற்கு பருவ மழையை எதிர் கொண்டு வருகிறது. பல்வேறு அணைகளில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட முதல்வர்
தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு, மற்றும் கேரள இளைஞர்கள் மீட்புப் பணியினை திறம்பட செய்து வருகிறார்கள். இடுக்கி, வயநாடு, எர்ணாக்குளம், மற்றும் இதர பகுதிகளைப் பார்வையிட இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஒரே விமானத்தில் பயணம் சென்றனர்.
இடுக்கியின் வானிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் விமானத்தை தரையிறக்கம் செய்ய இயலவில்லை. தற்போது பினராயி விஜயன் வயநாடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியினை பார்வையிட்டு வருகிறார். கேரளா வெள்ளம் தொடர்பான ஒரு புகைப்பட தொகுப்பு.
கேரளா மழைத் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள
26 வருடங்கள் கழித்து திறக்கப்பட்ட இடுக்கி அணை
இடுக்கி அணையின் முதல் மதகில் இருந்து வெளியேறும் நீர்
இடுக்கி அணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியின் ஏரியல் வியூ
கேரள முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை காண சென்ற போது
மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினர்
ஆர்பரிக்கும் வெள்ள நீர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி
வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்பு பகுதி