Kerala Rains : கேரளாவில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ள அபாயத்தில் இருந்து இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில் அங்கு மீண்டும் பருவமழை தொடங்குகிறது. தென்மேற்கு பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்கனவே 488 பேர் உயிரிழந்தனர்.
வெள்ள சேதாரத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது கேரளம். தற்போது வானிலை ஆய்வு மையம் இடுக்கி, பாலக்காடு, வயநாடு, பத்தினம்திட்டா, மற்றும் திரிச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரள வெள்ளம் ஏற்படுத்திய சேதங்கள்
தீவிர முன்னேற்பாடுகளில் கேரள அரசு
கேரளாவின் முதல்வர் பினராய் விஜயன் மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டிருக்கிறார்.
செப்டம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் 64.4மிமீ முதல் 124.4மிமீ வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே ஏற்பட்ட மழையின் பாதிப்பினைத் தொடர்ந்து 28 அணைக்கட்டுகளின் நிலையை ஆராய்ந்து வருகிறது மத்திய அரசு. மேலும் மத்திய அரசிடம் இருந்து நிவாரண நிதியாக ரூ.4,700 கோடி ரூபாய் வேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கிறது கேரள அரசு.