கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. இந்தியாவில் மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. பொதுப்பிரார்த்தனை, பொதுப்போக்குவரத்து, பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் ஆகியவற்றை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திருப்பதியில் கோவில் நடை திறக்கப்பட்டது.
இந்நிலையில் கேராளாவில் இருக்கும் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. நவம்பர் மாதம் 16ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
நவம்பர் மாதம் 15ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு, நவம்பர் 16ம் தேதியில் இருந்து பக்தர்கள் வருகைக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று சான்று அளித்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் நபர்கள், தங்களுக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழையும் அப்டேட் செய்தால் மட்டுமே கோவிலுக்கு வருகை புரிய அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய தேசியக் கொடி – ஆனா வரலாறு என்ன சொல்லுதுன்னா…!