டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய தேசியக் கொடி – ஆனா வரலாறு என்ன சொல்லுதுன்னா…!

இந்திய-அமெரிக்க சமூகத்தின் வளர்ந்து வரும் தேசபக்திக்கு ஒரு சான்றாகும்

By: August 11, 2020, 2:33:15 PM

வரலாற்றில் முதல் முறையாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய தேசியக் கொடி வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்றப்பட உள்ளது.

அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு முன்னணி அமைப்பு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைக்க இருக்கிறது.

நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் பகுதியின் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஏ) தனது அறிக்கையில், டைம்ஸ் சதுக்கம் ‘இந்தியாவின் சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 15, 2020 அன்று ‘முதல் கொடி ஏற்றும் விழாவை நடத்துவதன் மூலம்’ வரலாற்றை உருவாக்கும்’ என்று கூறியுள்ளது.

வெடி விபத்திற்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் ராஜினாமா!

“இந்தியாவின் மூவர்ணமானது வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் வெளிவருவது இதுவே முதல் முறையாகும்” என்று அந்த அமைப்பு கூறியது.

மேலும் இந்த நிகழ்வுக்கு நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

இதேபோல் எம்பயர் ஸ்டேட் கட்டடம் இந்திய தேசியக் கொடியின் மூன்று வர்ணங்களால் ஒளிரூட்டப்படும் விழா ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கொரோனா சமூக பரவல் இல்லாத 100 நாட்கள்; அசத்திய நியூசிலாந்து…

“நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றும் விழா, இந்திய-அமெரிக்க சமூகத்தின் வளர்ந்து வரும் தேசபக்திக்கு ஒரு சான்றாகும். மேலும் அதன் பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் எஃப்ஐஏவுக்கு இது ஒரு பொருத்தமான நிகழ்வாக இருக்கும்” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடந்த அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவின்போது நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் பூமி பூஜை படங்கள் 3டியில் காட்சிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.

எனினும், டைம்ஸ் சதுக்கத்தில் பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் விளம்பரம் கொடுப்பார்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அதற்கு சான்றாக, 2014ம் ஆண்டு, பிரபல பார்ன் (செக்ஸ்) வெப்சைட் ஒன்றின் விளம்பரம் டைம்ஸ் சதுக்கத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Indian tricolour to be hoisted at iconic times square in new york

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X