scorecardresearch

வெடி விபத்திற்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் ராஜினாமா!

திங்களன்று நீதித்துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

Beirut Blast lebanon Prime Minister Hassan Diab resigned as death roll rises

Beirut Blast lebanon Prime Minister Hassan Diab resigned as death roll rises : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த அம்மோனியம் நைட்ரேட் வெடி விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 6000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 15 பில்லியன் மதிப்பில் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது.  பெய்ரூட் துறைமுகத்தில் இருந்த ரசாயன கிடங்கில் முறையான பாதுகாப்பு இல்லாமல் சேமிக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் கடந்த வாரம் வெடித்து சிதறியது. உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வெடி விபத்தால் சில நொடிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதாரம் அடைந்தன.

மேலும் படிக்க : சென்னையில் இருந்து சாலை வழியாக செல்லும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட்!

அரசின் அலட்சியத்தால் தான் இத்தகைய வெடி விபத்து ஏற்பட்டது என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். இந்நிலையில் விபத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டின் பிரதமர் ஹசன் டியாப் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இந்த விபத்தால் லெபனான் தலைநகரம் பெய்ரூட் 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கிய நிலையை சென்றடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : மொரிசியஸில் தரை தட்டிய கப்பல்… எண்ணெய்க் கசிவால் பவளப் பாறைகளுக்கு ஆபத்து!

இந்த விபத்தால் கோபத்திற்கு ஆளாகிய லெபனான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட  துவங்கினர். அதன் விளைவாக பிரதமர் ராஜினாமா கடிதத்தை பாப்டாவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேரில் சென்று கொடுத்தார். பிரதமரின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக அந்நாட்டின் குடியரசு தலைவர் மிச்செல் ஔன் கூறியுள்ளார். மக்களோடு நின்று, ஏற்பட்ட பெரும் விபத்தில் பலியானவர்களின் நீதிக்காக போராட இருப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார்.  நேற்று காலையில் நீதித்துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Beirut blast lebanon prime minister hassan diab resigned as death roll rises