வெள்ள எச்சரிக்கை : கேரளாவில் தொடர்ந்து பல நாட்களாக மழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கேரளாவில் இருக்கும் மொத்தம் 14 மாவட்டங்களிலும் சிவப்பு நிற வெள்ள எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதற்கு முன்பு கொல்லம் மற்றும் திருவனந்தபுர மாவட்டங்களில் ஆரஞ்சு நிற வெள்ள எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ள அபாய எச்சரிக்கை
கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 அணைகள் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இடுக்கி சிறுதொணி அணை திறக்கப்பட்டதால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமும் உயரத் தொடங்கியது.
முல்லைப் பெரியாறு அணை வெள்ள எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணையில் சுமார் 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் எந்நேரமும் அந்த அணை நிரம்பும் சூழல் உருவாகியுள்ளது. 142 அடி வரை தண்ணீரை சேமிக்க முடியும். ஆனால் நீரின் வரத்து அதிகரித்து வந்த காரணத்தால் இன்று அதிகாலை 3.30 மணிக்கு அணையின் 13 மதகுகளும் திறந்துவிடப்பட்டன.
இதனால் 4 ஆயிரத்து 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் முல்லைப் பெரியாறு நதியோரம் இருக்கும் தேனி மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பும் பவானி சாகர் அணைப் பற்றிய செய்தியைப் படிக்க
கேரளாவை தமிழகத்தோடு இணைக்கும் குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே தேனி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு தமிழக கேரள போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது.
விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துகள் பாதிப்பு
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கொச்சி வரும் விமானங்கள் அனைத்தும் திருவனந்தபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கேரள அரசு பேருந்துக் கழகம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி வந்து தரை மார்க்கமாக கொச்சி அடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் தற்காலிகமாக கொச்சிக்கான விமான போக்குவரத்தினை நிறுத்தியுள்ளதாக ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது.
இரத்து செய்யப்பட்ட ரயில் போக்குவரத்து சேவை
56318 - நாகர்கோவில் - கொச்சுவெளி
56336 - கொல்லம் - புனலூர் பயணிகள் ரயில்
56335 - கொல்லம் - செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில்
56365 - கொல்லம் - எடமன் பயணிகள் ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது
முதல்வர் நிவாரண நிதி
கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க விரும்புபவர்கள் இந்த கணக்கில் தங்களின் நிதியைச் செலுத்தலாம் என்று டிவிட்டர் மற்றும் முகநூல் பக்களில் தகவல் பதிவு செய்திருக்கிறார் பினராயி விஜயன்.
வெள்ள எச்சரிக்கை விடப்பட்டிருக்கும் சில முக்கியமான பகுதிகள்
/tamil-ie/media/media_files/uploads/2018/08/kerala-vellam.jpg)