ஒரே ஒரு மாணவிக்காக இயக்கப்பட்ட படகு ! கேரள அரசுக்கு குவியும் பாராட்டுகள்

70 நபர்கள் பயணிக்க கூடிய அளவுள்ள படகில், அவர் மட்டுமே பயணம் செய்து தேர்வு எழுதி வந்தார்.

Kerala water transport corporation operated a boat for a single student
Kerala water transport corporation operated a boat for a single student

Kerala water transport corporation operated a boat for a single student : கொரோனா வைரஸ் காரணமாக பொதுபோக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. 68 நாட்களுக்கு பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து செயல்பட துவங்கியது. கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்திற்கு இணையாக படகு போக்குவரத்தும் மிக முக்கியமான ஒன்றாகும்.

குட்டநாடு பகுதியில் அமைந்திருக்கும் நன்னீர் தீவில் வசிக்கும் சாண்ட்ரா பாபு என்பவர் காஞ்சிராமில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கேரள அரசு 29 மற்றும் 30 தேதிகளில் பள்ளி தேர்வினை அறிவித்திருந்தது. ஆனால் அவர் வசிப்பிடத்தில் இருந்து பள்ளிக்கு செல்ல படகில் தான் செல்ல வேண்டும்.

மேலும் படிக்க : ஆறுதல் செய்தி… சென்னையில் தனிமைப் படுத்தப்பட்ட 1000 தெருக்களில் 14 நாட்களாக புதிய தொற்று இல்லை

ஊரடங்கு காரணமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், சாண்ட்ராவிற்கு உதவி செய்ய ஷாஜி வி. நாயர் (நீர் போக்குவரத்து துறை இயக்குநர்) முடிவு செய்தார். மாணவியை பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அரசு படகு மூலம் அவர் தேர்வு எழுத அழைத்துச் செல்லப்பட்டார்.

70 நபர்கள் பயணிக்க கூடிய அளவுள்ள படகில், அவர் மட்டுமே பயணம் செய்து தேர்வு எழுதி வந்தார். தேர்வு எழுதி முடித்துவிட்டு படகுத்துறை வரும் வரையில் அவர் படகும், படகு இயக்கும் குழுவினரும் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kerala water transport corporation operated a boat for a single student

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com