/tamil-ie/media/media_files/uploads/2020/05/lakshadweep-islands.jpg)
lakshadweep records zero coronavirus cases till today
lakshadweep records zero coronavirus cases till today : உலகம் முழுவதும் சுமார் 55 லட்சம் நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளோ 3.45 லட்சம் என்ற நிலையை எட்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் இந்த நோயால் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 04 ஆயிரத்தை எட்டியுள்ளது.
மேலும் படிக்க : ஈகைப் பெருநாளில் 200 ஏழைகளுக்கு பிரியாணி பரிமாறிய சென்னை காஜா பாய் கடை!
இந்நிலையில் இந்தியாவில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் கொரோனா நோய் தொற்று ஏற்படவில்லை. கேரள கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் லட்சத்தீவுகளில் மட்டும் தான் கொரோனா நோய் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. 36 தீவுகளில் வாழும் 64 ஆயிரம் நபர்களில் யாருக்குமே கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : கருநாகத்தை வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன் – கேரளாவில் அதிர்ச்சி
நேற்று வரை வடகிழக்கு இந்தியாவில் அமைந்திருக்கும் நாகலாந்து மாநிலத்திலும் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் நேற்று சென்னையில் இருந்து அம்மாநிலத்திற்கு சென்ற மூன்று நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் லட்சதீவில் வசிக்கும் நபர்களுக்கு மட்டுமே கொரோனா நோய் தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.