அனைவருக்கும் தடுப்பூசி; விரைவில் திட்டத்தை அறிவிக்க இருக்கும் அரசு
இந்தியாவில் அதிக அளவு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய மூன்று நிறுவனங்களும் தங்களின் தொழில்நுட்பத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்று இந்தியா எதிர்பார்க்கிறது
இந்தியாவில் அதிக அளவு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய மூன்று நிறுவனங்களும் தங்களின் தொழில்நுட்பத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்று இந்தியா எதிர்பார்க்கிறது
Govt unveils roadmap for supply of Covid vaccines : நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு மத்தியில் முதன்முறையாக, ஃபைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் ஆண்ட் ஜான்சன் நிறுவனத்துடன், இந்தியாவுக்கு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த மூன்று நிறுவனங்களும் தடுப்பூசி தொடர்பான விவாதங்களை இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நடத்தலாம் என்று கூறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 2 பில்லியனுக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசிகள் இந்தியாவுக்கு கிடைக்கக்கூடும் என்று தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அளித்துள்ள மதிப்பீடுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதங்களில் தடுப்பூசிகளின் கையிருப்பு எவ்வளவு இருக்கும் என்று அறிந்து கொள்ள உற்பத்தியாளர்களை அணுகிய போது, இந்த காலகட்டத்தில் 216 கோடி டோஸ்கள் இந்தியாவில் இருக்கும் என்றும் அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசிகளை வழங்குவோம் என்றும் கோவிட்19 டாஸ்க் ஃபோர்ஸ் தலைவர் மருத்துவர் வி.கே. பால் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு மருந்துகளை வழங்குவதற்காக ஃபைசர், மாடர்னா மற்றும் ஜே & ஜே ஆகியவற்றை அரசாங்கம் "முறையாக" அணுகியுள்ளதாகவும், இந்தியாவுக்கு பல்வேறு வழிகளில் அந்நிறுவனங்கள் உதவ தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது என பால் கூறினார்.
மூன்று நிறுவனங்களும் தங்களுக்கு உடனடியாக இலவச திறனைக் கொண்டிருக்கவில்லை என்றும், சில மாதங்களுக்குப் பிறகுதான் பேசும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன. எங்களுக்கு இடையேயான உறவு நன்றாக உள்ளது. இருப்பினும் அவர்களின் திட்டங்கள் படி அவர்கள் முன்னோக்கி நகருகின்றனர். தடுப்பூசியின் கையிருப்பு மற்றும் நமக்கு கிடைப்பது தொடர்பாக மூன்றாம் காலாண்டில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். நாங்கள் ஃபைசர், மாடர்னா மற்றும் ஜே & ஜே உடனான பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்தியாவில் தடுப்பூசிகள் கிடைப்பதை அதிகரிக்க அவர்கள் முன்வருவார்கள் என்று நம்புகிறோம் என பால் கூறினார்.
இந்தியாவில் அதிக அளவு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய மூன்று நிறுவனங்களும் தங்களின் தொழில்நுட்பத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்று இந்தியா எதிர்பார்க்கிறது என பால் கூறினார். அவர்கள் தங்கள் தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்றும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம். தொழில்நுட்ப பரிமாற்றத்தை அவர்களால் மேற்கொள்ள முடியும் என்றும் நம்புகிறோம். அதற்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும் என்றும் அவர் கூறினார். 7.30 கோடி தடுப்பூசிகள் இம்மாதம் இந்தியாவிற்கு கிடைக்கும் என்றும், அதில் 1.27 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு நேரடியாக வழங்கப்படும் திட்டத்தில் உள்ளன என்றும் 80 லட்சம் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil