New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/cats-3.jpg)
இனி எப்படி இந்த உணவகத்தை நம்பி செல்வது என வாடிக்கையாளர்கள் வருத்தம்
டெல்லியில் உள்ள ஹோட்டல் சரவணபவனில் வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்ததை பார்த்து புகார் கொடுத்துள்ளார் கொனாட் பகுதியில் அமைந்திருக்கும் சரவண பவனில் குடும்பத்துடன் உணவருந்த சென்ற யஷ் அக்னிகோத்ரி என்பவர்.
A dead lizard found in sambar at most popular restaurant saravana Bhavan, Connaught Place (CP), New Delhi pic.twitter.com/yAwqBX7PvD
— Golden corner (@supermanleh) August 2, 2020
அந்த காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து 2 பிரிவுகளின் கீழ் சரவணபவன் உணவகத்திலும், அதன் மேலாளர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் டெல்லி காவல்துறையினர். அவர்களுக்கான உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், இது போன்ற செய்திகளை பார்த்தால் நாளை எப்படி அங்கே சென்று உணவருந்துவது என்று சந்தேகமாகவும் பலரும் தங்களின் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.