Locust attack destroying crops in Rajasthan and Gujarat : கொரோனா வைரஸால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் திண்டாடி வருகிறது. இதனை கட்டுப்படுத்த போதுமான முயற்சிகளை எடுத்து வருகின்றது இந்திய அரசு. ஆனால் அதே நேரத்தில் தற்போது புது தலைவலி உருவாகியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து கூட்டம் கூட்டமாய் இந்தியாவை நோக்கி படையெடுத்து வரும் வெட்டுக் கிளிகள் இலை, பூ, பழம், காய், தண்டு என, தற்போதைய பருவ பயிர்கள் அனைத்தையும் தின்று செரித்து வருகிறது. எல்லையோர மாவட்டங்களில் பெரும் சவாலாய் இருந்த இந்த வெட்டுக்கிளிகள் தற்போது உள்மாவட்டங்களை நோக்கி வர துவங்கியுள்ளது.
மேலும் படிக்க : காசிக்கு ஆதரவாக வாதிட மாட்டோம் – நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம்!
ஒரு சதுர கிலோ மீட்டருக்குள் சுமாராக 40 லட்சம் வெட்டுக்கிளிகள் வர முடியுமாம். ஒரே நாளில் 35 ஆயிரம் மக்கள் சாப்பிட வேண்டிய உணவை அழித்துவிட்டு செல்லும் அளவிற்கு மிகவும் ஆபத்தான வெட்டுக்கிளிகள் இவை.
கடந்த ஆண்டு 3 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேரில் விளைந்த பயிர்களையெல்லாம் அழித்துவிட்டது இந்த வெட்டுக் கிளிகள். இந்த முறை இது போன்ற செயலை தவிர்க்க ராஜஸ்தான் அரசு முயன்று வருகிறது. இதற்காக 84 கோடி ரூபாயை நிதியாக மத்திய அரசிடம் கேட்டுள்ளது ராஜஸ்தான் மாநில அரசு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
எத்தோப்பியா மற்றும் சோமாலியாவில் இருந்து இந்த வெட்டுக் கிளிகள் தெற்காக கென்யா வரை பரவி அங்கிருந்து 14 நாடுகளில் பரவியது. எத்தோப்பியா மற்றும் சோமாலியா நாடுகள் கடந்த 25 வருடங்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பரவும் இந்த வெட்டுக்கிளிகள் சௌதி அரேபியா, ஓமன் மற்றும் ஏமன் நாடுகள் வழியாக இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியை அடைகிறது. சிறிய அளவு கொம்புகள் கொண்ட இந்த வகை வெட்டுக் கிளிகள் நாள் ஒன்றுக்கு 150 கி.மீ வரை பயணிக்க கூடியவை. இந்தியாவில் டெசர் லோகஸ்ட், மைக்ரேட்டரி லோகஸ்ட், பாம்பே லோகஸ்ட் மற்றும் ட்ரீ லோகஸ்ட் என நான்கு வகையான இவ்வகை வெட்டுக் கிளிகள் கண்டறியப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”