Lok Sabha Polls 2019 : Third Party Front : தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார் கே.சந்திரசேகர ராவ். அதனைத் தொடர்ந்து மரியாதை நிமித்தமாக பல்வேறு மாநிலங்களில் இருக்கும் முதல்வர்களையும் முக்கிய கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசிவருகிறார் அவர்.
பாஜகவிற்கு எதிரான கருத்துகள் கொண்டுள்ள கட்சி தலைவர்களை அவர் சந்தித்து பேசியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்னாயக்கையும் நேரில் சந்தித்து பேசினார். அதன் பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார் கே.சி.ஆர்
மோடி - சந்திரசேகர ராவ் சந்திப்பு
சந்திரசேகர ராவ் மரியாதை நிமித்தமாகும், தெலுங்கானாவிற்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள் தொடர்பாகவும் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
அப்போது தெலுங்கானா மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் 10 மாவட்டங்களை மேம்படுத்துதல் தொடர்பாகவும், தெலுங்கானவிற்கென தனி உயர் நீதிமன்றம் அமைப்பது தொடர்பாகவும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் ஐ.ஐ.டி (கரீம் நகரில்) அமைப்பது தொடர்பாகவும் பேசியதாக தகவல்கள் வெளியாகின.
Hon'ble Chief Minister Sri K. Chandrashekar Rao met Hon'ble Prime Minister Sri @NarendraModi Ji today in New Delhi and discussed various issues pertaining to the State. pic.twitter.com/Cg1T2cyBB8
— Telangana CMO (@TelanganaCMO) 26 December 2018
Lok Sabha Polls 2019 : Third Party Front - குறித்து சந்திரபாபு நாயுடு கேள்வி
பாஜவிற்கும், காங்கிரஸிற்கும் மாற்றான சித்தாங்களை கொண்ட கட்சியாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி, இப்போது ஏன் மோடியை சந்தித்து பேச வேண்டும் ?
அதுவும் மோடியின் கொள்கைகளுக்கு எதிராக கருத்துகளை கொண்டவர்களை சந்தித்துவிட்டு ஏன் மோடியை சந்திக்க வேண்டும் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சந்திரபாபு நாயுடு. வருகின்ற பொதுத்தேர்தலிலும் இரண்டே கூட்டணிகள் தான் இருக்கும். ஒன்று பாஜக மற்றொன்று காங்கிரஸ் என்று தெளிவுப்படுத்தியுள்ளார் ஆந்திர முதல்வர்.
காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகளின் கூட்டணியுடன் பாஜகவை எதிர்த்து ஜெயிக்கின்ற முனைப்பில் சந்திரபாபு நாயுடு இருக்கின்றார்.
கே.சி.ஆரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள்
முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட கே.சி.ஆர், வருகின்ற நாட்களில் முக்கியமான மாநிலங்களுக்கு யாத்ரை செல்ல இருக்கின்றார்.
உத்திரப்பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சிகளாக திகழும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலைவர்களாக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்திக்க திட்டமிட்டுள்ளார் அவர்.
அகிலேஷ் யாதவை ஹைதராபாத்தில் 6ம் தேதி சந்திக்க உள்ளார் கே.சி.ஆர். மாயாவதியுடனான சந்திப்பு குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க : உருவாகின்றதா மூன்றாவது அணி... காங்கிரஸ் / பாஜக இல்லாத மாற்று அணி சாத்தியமா ?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.